சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 3,5,8-ம் வகுப்பில் இனி 30 சதவீதம் குறைவாக மதிப்பெண் எடுத்தால் பெயில் என்றும் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற விதியை சிபிஎஸ்சி வரும் கல்வியாண்டு முதல் மாற்றுவதகாவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் போய் யா மொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் மகேஷ் பொய்யா மொழி, சிபிஎஸ்இ-யில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற விதி ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். அனைத்து குழந்தைகளுக்காகவும் பேசுவதாகவும் திமுக அனைத்து மாணவர்களுக்காகவும் போராடி வருகிறது என்றும் கூறினார். தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் இதன் காரணமாகவே எதிர்த்து வருகிறது என்று கூறிய அவர் மத்திய அரசின் நடவடிக்கையால் மாணவர்கள் கல்வி இடைநீற்றல் அதிகரிக்கும் என்றும் தேசிய கல்விக் கொள்கைக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 139 ரூபாய் எப்படி பத்தும்? நாங்க ஆட்சிக்கு வந்தால்... சுளுக்கெடுத்த ராமதாஸ்..!

இது எப்படி சாத்தியம் என பெற்றோர்கள் கேள்வி கேட்கும் போதுதான் தமிழக முதலமைச்சர் கரங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக இருக்கும் என்றும் 5,8 ஆம் வகுப்பு மாணவர்கள் தோல்வி அடைந்து மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வங்கி ஊழியர்களா.. கந்துவட்டி காரர்களா..! யார் கொடுத்த அதிகாரம்? சீறிய அன்புமணி..!