சென்னை புறநகர் தொகுதியான சிங்கப்பெருமாள் கோவில் அருகே பிரபல தொழிலதிபர் வீட்டில் நள்ளிரவில் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 140 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை அடித்து சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை புறநகர் பகுதியான சிங்கபெருமாள்கோவில் பாரதியார் தெருவில் வசித்து வருபவர் ரத்தீஷ் இவர் கே.ஆர்.சி ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். ரதீஷ் தனது குடும்பத்துடன் நேற்று இரவு பக்கத்து தெருவில் உள்ள தனது மகன் வீட்டில் தங்கி உள்ளார்.
இன்று காலை நிகழ்ச்சி ஒன்றுக்கு பங்கேற்பதற்காக செல்வதற்காக தனது வீட்டிற்கு வந்த நிலையில், வீட்டின் பூட்டை உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உள்ள சென்று பார்த்தபொழுது பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்ததையும், அனைத்து பொருட்களும் களையப்பட்டு வீட்டில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 140 சவரன் தங்க நகைகள் ,வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துச் சென்று இருப்பதும் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
இதையும் படிங்க: வரும் 15ஆம் தேதி முதல் மெட்ரோ பணிக்கான லாரிகள் ஸ்ட்ரைக்... மணல் உரிமையாளர்கள் சங்கம் அதிருப்தி
தொடர்ந்த ரத்தீஷ் மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில், வண்டலூர் சரக காவல் உதவி ஆணையாளர் ராஜீவ் ஆருண் பிரின்ஸ் தலைமையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீசார் விசாரணை தொடங்கி இருக்கின்றனர். தற்பொழுது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட இடங்களில் கைரேகை நிபுணர்களை வைத்து ஆதாரங்களை சேகரிக்கும் பணியை போலீசார் துவங்கி இருக்கின்றனர்
இந்த சம்பவம் தொடர்பாக சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இந்தியா வாங்க!! உங்களை ஆவலா எதிர்பாக்குறோம்! புடினிடம் பர்ஷ்னலாக பேசிய மோடி!!