சென்னை மௌலிவாக்கத்தில் நண்பர்களால் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மௌலிவாக்கத்தில் 17 வயது சிறுமி நண்பர்களே பாலியல் வன்கடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. மவுண்ட் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி காணவில்லை என பெற்றோர் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் காணாமல் போன சிறுமி வீட்டிற்கு வந்த நிலையில் அவரது நண்பர்கள் போதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிமருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 17 வயது சிறுமியை பாலியில் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மௌலிவாக்கம் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: காலையிலேயே படுபயங்கரம்... வாயில் துணியை திணித்து சிறுமியை சீரழித்த 2 மிருகங்கள்...!
இந்த புகாரின் பெயரில்அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாததால் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி, தனது நண்பர்கள் அறையில் தங்கி இருந்துள்ளார். அங்கு மது போதையில் இருந்த நண்பர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசாரிடம் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்தும், சிறுமிக்கு எந்த வகையான பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை... கையும் களவுமாக சிக்கிய காமுகனுக்கு தர்ம அடி...!