சமீப காலமாக பாலியல் வன்கொடுமைத் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குழந்தை முதல் பாட்டி வரை யாரையுமே காமக் கொடூரர்கள் விட்டு வைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக பள்ளி சிறுமிகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொந்தரவு தொடர்பான சம்பவங்கள் பெண்கள் பாதுகாப்பு கேள்வி குறியாக்கி உள்ளது. இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பள்ளி கழிவறையை சுத்தம் செய்யச் சென்ற இளைஞன் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும் பெற்றோரிடம் கூறக்கூடாது என சிறுமியை மிரட்டிய ஆசிரியரையும் சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்தனர்.
இதையும் படிங்க: உ.பி.யில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. ஊசிப்போட்டு வன்கொடுமை செய்யப்பட்ட பயங்கரம்..!

திருப்பூர் மாவட்டம் கே வி ஆர் நகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வந்த அசாமை சேர்ந்த இளைஞன் ஒருவன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அந்த இளைஞனை போல சார் கைது செய்துள்ளனர். இருப்பினும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெற்றோரிடம் கூறக்கூடாது என சிறுமையை ஆசிரியர் ஒருவர் மிரட்டியதாக கூறி அந்த ஆசிரியரை சூழ்ந்து கொண்டு பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை சமாதானம் செய்ய சென்ற போலீசார் உடன் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வழக்கு.. தாபாவில் போலீசார் ஆய்வு.. சிக்கிய தடயங்கள்..!!