ரேஷன் கார்டு தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஜார்க்கண்ட் முழுக்க நடந்த சோதனையில சுமார் 2 லட்சத்து 54 ஆயிரத்து 887 ரேஷன் கார்டுகள் அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நடைமுறையானது அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எதுக்கு இவ்வளவு கார்டுகளை ரத்து பண்றாங்க?. அப்போது நம்முடைய கார்டையும் ரத்து செய்துவிடுவார்களோ? என்ற பயம் உங்களுக்கு வரலாம். அதுக்கான காரணம் என்ன?, யாருடைய ரேஷன் கார்டுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளன என பார்க்கலாம்.
ரேஷன் கார்டுகளை தவறான முறையில் பயன்படுத்தி வரும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தகுதியான குடும்பங்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குவதை உறுதி செய்வதற்காகவும் மாநில அரசு 4 பிரிவுகளின் கீழ் சுமார் 2 லட்சத்து 58 ஆயிரத்து 344 ரேஷன் கார்டுகளை ரத்து செய்துள்ளது. இந்த வகைகளில், குடும்பத் தலைவர் இறப்பு, 100 வயதுக்கு மேற்பட்டவர் மற்றும் 18 வயதுக்குக் குறைவானவர்கள், 6 மாதங்களாக தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருப்பது, விதிகளை மீறுதல் மற்றும் இரட்டைப் பலன் பெறும் பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முதலாவது மிக முக்கியமான காரணம் குடும்ப தலைவர் இறந்து போன பிறகும் அவர்களுடைய பெயரில தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்குபவர்களின் பெயரில் உள்ள கார்டுகளில் வாங்குவது முறைகேடாக கருதப்பட்டு, அதனை தடுக்க சுமார் ஒன்றரை லட்சம் கார்டுகளை அரசு நீக்கியுள்ளது, ஒரு குடும்ப அட்டைதாரர் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் ரேஷன் கடையில் எந்தப் பொருளும் வாங்காமல் இருந்தால், அவர்களுக்கு அந்த அத்தியாவசியப் பொருட்களின் தேவை இல்லை எனக் கருதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 97,867 ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: காலையிலேயே அதிர்ச்சி...அசுர வேகத்தில் பைக் மீது ஏறி இறங்கிய சரக்கு வாகனம்... 3 இளைஞர்கள் உடல் நசுங்கி பலி...!
மூன்றாவதாக ஒரு குடும்ப தலைவியோட வயது 18க்கு மேல இருக்கணும். ஆனா 18 வயதிற்கு குறைவானவர்கள் பெயரில் இருந்த சுமார் 8,381 ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு நபர் வெவ்வேறு இடங்களில் ரேஷன் கார்டு வைத்திருப்பதை இரட்டை பலன் என்ற அடிப்படையில் 7,529 அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரட்டைப் பலன் என்பது தேசிய ரேஷன் கார்டு போர்ட்டபிலிட்டி திட்டத்தின் கீழ், பயனாளிகள் ஒரே ஆதார் அட்டையில் மாநிலத்திற்குள் இரண்டு மாவட்டங்களில் அல்லது இரு வேறு மாநிலங்களில் இருந்து ரேஷன் பெறுவதாகும்.
இதையும் படிங்க: திமுகவில் இருந்து வெளியேறப் போகும் முக்கிய கூட்டணி கட்சி... அடித்துச் சொன்ன நயினார் நாகேந்திரன்...!