ஆசியாவின் மிகப்பெரிய பெரிஷபிள் பொருட்கள் சந்தையாக அறியப்படும் கோயம்பேடு மார்க்கெட், 295 ஏக்கர் பரப்பளவுடன், சென்னையின் உணவு சங்கிலியின் மையமாகத் திகழ்கிறது. 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சந்தை, இன்று 3,100க்கும் மேற்பட்ட கடைகளுடன், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பேர்வழிகளை ஈர்க்கிறது. இது வெறும் வணிக இடமல்ல. அது விவசாயிகளின் உழைப்பு, வியாபாரிகளின் ஓய்வில்லா உழைப்பு, மற்றும் நுகர்வோரின் தினசரி தேவையை பூர்த்தி செய்யும் இடமாக விளங்குகிறது.
இந்த சந்தை சென்னைக்கு அளிக்கும் முக்கியத்துவம், அதன் பொருளாதார மற்றும் சமூகத் தாக்கத்தில் தெரிகிறது. இது நகரத்தின் உணவு விநியோகத்தின் மையமாக இருக்கிறது, தினசரி லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு புதிய உணவை உறுதி செய்கிறது. விவசாயிகளுக்கு நேரடி சந்தா வாய்ப்பை வழங்கி, அவர்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. 850 பழக் கடைகள் மட்டுமின்றி, 2,000 சில்லறை கடைகள் உள்ளன, இது சிறு வணிகர்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்கின்றன.

சந்தையின் விரிவாக்கங்கள் மற்றும் நவீனமயமாக்கல்கள், அதன் எதிர்காலத்தைப் பிரதிபலிக்கின்றன. கோயம்பேடு காய்கறி சந்தையின் இணையதளம் தொடக்கம் தொடங்கப்பட்டுள்ளது.கோயம்பேடு காய்கறி சந்தையின் இணையதள சேவையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னை கோயம்பேடு அங்காடி நிர்வாக அலுவலகத்தில், கோயம்பேடு Market Management Committee-க்கான புதிய இணையதளச் சேவையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவை தொட்டுக்கூட பாக்க முடியாது... பாஜகவுக்கு சவால் விட்ட உதயநிதி..!
இந்த நிகழ்ச்சியில், முக்கிய அதிகாரிகள், மக்களவை உறுப்பினர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் உட்பட ஏராளமானர் பங்கேற்றனர். அப்போது, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 3வது மாஸ்டர் பிளான் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சமூக நீதி எல்லாம் அரசியல் நேரத்து சாயம் தானா? முதல்வரை விளாசிய நயினார்...!