தமிழ்த் திரைப்படத் துறையில் பன்முகத் திறமையாளராகத் திகழும் ரா. பார்த்திபன், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எழுதுதல் என அனைத்திலும் தனித்து விளங்குபவர். 1957 நவம்பர் 15 அன்று சென்னையில் பிறந்த இவர், தனது வாழ்க்கையைத் திரைப்படங்களுக்கே அர்ப்பணித்து, புதிய பாதைகளைப் படைத்தவர். இவரது திரை வாழ்க்கை, சவால்களையும் வெற்றிகளையும் சூழ்ந்து நிற்கும் ஒரு உத்வேகக் கதை. இன்று 67 வயதான இவர், இன்னும் புதுமைகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார்.பார்த்திபனின் ஆரம்ப வாழ்க்கை, திரை உலகின் மாயத்தால் ஈர்க்கப்பட்டது.
1984இல் இயக்குநர் கே. பாக்யராஜின் உதவி இயக்குநராகத் தொடங்கி, 20க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் தாவணி கனவுகள், பறவையின் மறுபக்கம், வேடிக்கை மனிதர்கள் போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்து, தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்து வந்த படங்கள், பார்த்திபனை நட்சத்திரமாக உயர்த்தின. அவரது வசனங்கள், நகைச்சுவை கலந்த நடிப்பு ரசிகர்களை மோகம் கொண்டது.

பார்த்திபனின் திரை வாழ்க்கை, புதுமைகளால் நிரம்பியது. 2010இல் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழ மன்னராக நடித்து, ஃபிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார். இந்தப் படம் அவரது நடிப்பின் உச்சமாகக் கருதப்படுகிறது. 2011இல் மேல்விளாசம் படம், குடும்ப உணர்வுகளைத் தொட்டது. 2019இல் வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 படம், ஒரே ஒரு கதாபாத்திரத்துடன் அமைந்தது. உலக அளவில் அரிதான முயற்சி. இது டொரான்டோ தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளையும், 67வது தேசியத் திரைப்பட விருதுகளில் சிறப்பு ஜூரி விருதையும் பெற்றது. 2022இல் வெளியான இரவின் நிழல் படம், உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக அறிவிக்கப்பட்டது. இதில் அவர் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என அனைத்து பணிகளையும் தனிமையில் செய்தார். இந்தப் படம் திரை அமைப்புகளில் மட்டுமே வெளியிடப்பட்டு, புதுமையின் உச்சத்தை அடைந்தது.
இதையும் படிங்க: தவெக மீது பொய் புகார்... FACT CHECK-ல் வெட்ட வெளிச்சமான உண்மை...!
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பொய் செய்தி பரவியது. இதனால் கோபம் கொண்ட பார்த்திபன், இது போன்ற செய்திகள் மரணமடைய வேண்டும் என கூறியுள்ளார். இதை தயாரிப்பவர்கள் தங்களின் வாய்க்கரிசிக்காக செய்தாலும் மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா என கேள்வி எழுப்பினார். சம்மந்தப் பட்டவர்களின் குடும்பம்., அது தாயோ தாரமோ பெற்றதுகளோ யோசிக்க வேண்டும்., இது பல முறை, என்னை மட்டுமல்ல பலரையும் இறைவனடி சேர shortest route ticket வாங்கிக் கொடுத் திருக்கிறார்கள் என்றும் அவர்களாகவே திருந்த அந்த சுடுகாட்டு சுடலை சாமியோ, ஆறாவது அறிவோ உதவ வேண்டும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: தேசிய விருதை தட்டிச்சென்ற இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்… ஜனாதிபதி திரௌபதி முர்மு கௌரவிப்பு…!