வடமாநிலங்கள், குறிப்பாக வடக்கு, மேற்கு மண்டலங்களில் உள்ள விமான நிலையங்கள் வரும் 10ம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் எல்லை ஓரமாக இருக்கும் மாநிலங்கள், மாவட்டங்களில் இருக்கும் விமான நிலையங்கள் முன்எச்சரிக்கையாக மே 10ம் தேதி மாலை 5.29 மணி வரை மூடப்பட்டும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அறிவித்துள்ளது.

காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூரை பாகிஸ்தானிலும், ஆக்கிமிப்பு காஷ்மீர் பகுதியிலும் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், அவர்களின் உள்கட்டமைப்பு வசதிகள் சேசமடைந்தன.
இதையும் படிங்க: ஸ்டீல், ஆட்டொமொபைல் உதிரி, மருந்துகளுக்கு வரிவிலக்கு.. அமெரிக்காவுக்கு சலுகையளிக்க இந்தியா திட்டம்..!
இந்த தாக்குதல் நடத்துவதற்கு முன்னெச்சரிக்கையாக பாகிஸ்தான் எல்லை ஓரத்தில் இருக்கும் விமானநிலையங்களை மே 10ம் தேதிவரை மூட மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன்படி யூனியன் பிரேதசங்களான ஜம்மு காஷ்மீர், லேஹ், பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள் மூட உத்தரவிடப்பட்டது.

இந்திய விமான நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் ஏராளமான விமானங்கள் உள்நாட்டளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து வரும் சர்வதேச விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியே பயன்படுத்தாமல் இந்தியாவுக்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்மு, ஸ்ரீநகர் விமான நிலையம், அமிர்தசரஸ், சண்டிகர், பாட்டியாலா, ஹல்வாரா விமான நிலையங்களும், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலா விமானநிலையம், ராஜஸ்தானில் பிகானிர், ஜோத்பூர், ஜெய்சல்மார், கிஷான்கார்க் விமான நிலையங்கள், குஜராத்தில் பூஜ், ஜாம்நகர், ராஜ்கோட், முந்த்ரா, போர்பந்தர், கான்ட்லா, கேஷ்ஹோட் ஆகிய விமானநிலையங்களும் மூடப்பட்டன.

இதுதவிர குவாலியர், ஹின்டன் விமான நிலையங்களும் மூடப்பட்டன. விமான நிறுவனங்களும், இந்திய விமானப்படையும் இணைந்து செயல்படுத்தும் விமானநிலையங்களே பெரும்பாலும் மூடப்பட்டன. இன்டிகோ விமான நிறுவனம் மே 10ம் தேதி வரை 11 விமான நிலையங்களில் 165 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா விமானநிறுவனம் சார்பில் 9 விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா விமானம் சார்பில் அமர்தசரஸ், குவாலியர், ஜம்மு, ஸ்ரீநகர் ஹின்டர் பகுதியிலேயே நிறுத்தப்படும். ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் லே, ஸ்ரீநகர், ஜம்மு, தரம்சலா, கன்ட்லா, அமிர்சரஸ் பகுதியிலேயே நிறுத்தப்படும்.
இதையும் படிங்க: இன்னும் பதவிக்காலமே முடியல... ஐஎம்எப் இயக்குனரை திரும்ப அழைத்த மத்திய அரசு..!