கடலூர் துறைமுக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை, மாலை சுமார் உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் வீட்டின் அருகே கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர். குழந்தையை கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் தாய் அளித்த புகாரின் பேரில் கடலூர் துறைமுக போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 15 வயது சிறுவர்களை சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தச் சிறுவன் கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பயின்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தகவல் பரவியதையடுத்து பச்சையாங்குப்பம் பகுதி மக்கள் மற்றும் குழந்தையின் உறவினர்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நள்ளிரவில் திரண்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீஸார் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வகுப்பறைக்குள் நிர்வாணப்படுத்தி... 8ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்... மூடி மறைக்கப் பார்த்த ஆசிரியர்கள்?
மேலும், குழந்தைக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தையை பார்க்க வேண்டும் என அவர்கள் கேட்ட நிலையில் அவர்கள் அனுமதிக்காததால் காவல்துறையினிடம் கடும் வாக்குவாதத்தில் அவர்கள் ஈடுபட்டனர் மேலும் பிடிபட்ட சிறுவர்களை தங்களிடம் காண்பிக்க வேண்டும் எனவும் காவல்துறையிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் பிரமுகர் வழக்கறிஞருமான சந்திரசேகர் என்பவர் குழந்தையை பார்க்க வந்தபோது காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் காவல்துறையினரிடம் அவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நள்ளிரவு நேரத்தில் காவல் துறையினர் அனைவரிடமும் பேசி நிச்சயமாக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் ஒரு பதட்டமாக சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக துறைமுக காவல் நிலைய போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!