மத்திய பிரதேசம் ஜபல்பூர் படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நர்மதை அணையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பர்கி அணையில் சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று 29 பேருடன் பயணித்த சுற்றுலா படகு ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் மத்திய பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற தாராபுரத்தை சேர்ந்த சௌபாக்கியம் அவரது ஏழு வயது மகன் மயூரான், சௌபாக்கியத்தின் நாத்தனார் கார்குழலி, கார்குழலியின் கணவர் காமராஜ், கார்குழலி காமராஜ் தம்பதியின் ஐந்து வயது மகன் தமிழ்வேந்தன் ஆகியோர் உயிரிழந்தனர்.
ஐந்து பேரை பலிகொண்ட இந்த துயர சம்பவம் தாராபுரம் மூலனூர் பகுதியில் உள்ள சௌபாக்கியத்தின் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “எங்க அண்ணன் வீடு இது. எங்க அண்ணன், அண்ணி மகன், மருமகள், பேரன், பேத்தி எல்லாரும் மகள் வீட்டுக்கு போனாங்க. அங்க போன இடத்துல சுத்தி பா்கறதுக்கு போனாங்க படகில் போகும்போது விபத்து ஏற்பட்டு, மருமகள், இரண்டு பேரன்கள், மகந்ன்னு 5 பேர் இறந்துட்டாங்கன்னு போலீஸ் வந்து சொன்னாங்க” என ஒட்டுமொத்த குடும்பமே கண்ணீர் வடிக்கிறது.
இதையும் படிங்க: டிக்கெட் பரிசோதகரை விரட்டி, விரட்டி செருப்பால் அடித்த அரசு பேருந்து நடந்துநர்... நடந்தது என்ன?
ஜபல்பூரில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 38 வயதான காமராஜ், அவரது மனைவி 38 வயதான கார்குழலி மற்றும் அவர்களது இளைய மகன் 5 வயதான தமிழ்வேந்தன் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். அவர்களது மூத்த மகன், 11 வயதான புவிதரன், மீட்கப்பட்டதாகவும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கார்குழலியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இறுதிச் சடங்குகள் செய்வதற்காக, பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் திருச்சிக்குக் கொண்டுவரப்படும் என வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உயிரிழந்தவர்களின் உடல்கள் திருச்சிக்குக் கொண்டுவரப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் வி. சரவணன் தெரிவித்தார். உடல்களைத் திருப்பி அனுப்புவதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவதற்காக, தமிழக அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
விபத்து நடந்தது எப்படி?
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் பர்கி அணைக்கு அருகில் உள்ள நர்மதா ஆற்றில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து படகு பயணம் மேற்கொள்கின்றனர். இப்படியான நிலையில் நேற்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 40க்கும் மேற்பட்டோர் படகில் ஆற்றில் பயணித்தனர். அப்போது திடீரென வானிலை கடுமையாக மோசமடைந்தது. இதனால் பலத்த காற்று அடைத்ததால் படகு கவிழ்ந்தது.
இதில் படகில் இருந்த அனைவரும் நீருக்குள் மூழ்க தொடங்கினர். அவர் லைஃப் ஜாக்கெட் போடாமல் இருந்தது, நீச்சல் தெரியாததால் ஏற்பட்ட பயம் காரணமாக அனைவரும் நீரில் பரிதவித்தனர். இதுவரை அந்த சுற்றுலா படகில் இருந்து 28 பயணிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இன்னும் 6 பேரை தேடும் பணி நடந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவை இணைந்து படகு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த படகில் பயணித்த பல பயணிகள் அதனை இயக்கியவரிடம் நிலைமை மோசமாக இருப்பதால் திரும்பி செல்லுமாறு வலியுறுத்தியதாகவும், அதனை படகை இயக்கியவர் கேட்கவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ”பார்ப்போம் இன்னும் 3 நாள் தானே இருக்கு...: - விஜய் குறித்த கருத்துக்கணிப்பு பற்றிய கேள்விக்கு கனல் கண்ணன் தெறி பதிலடி...!