தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்த அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல்முறையாக இந்த தேர்தலை சந்திக்கிறார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. விஜய் மாற்றத்திற்கான முகமாக இருப்பார் என்று பலர் கூறி வருகின்றனர்.
இருப்பினும் திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் சொல்லி வருகின்றனர். மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், அடுத்ததாக தேதி சீரடி சாய்பாபாவை வழிபட்டார். இவை அவரது பக்தி நிலையையும், ஆன்மீக நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்த செய்தி, தற்போதைய அரசியல் சூழலில் விஜய்யின் நடவடிக்கைகளுக்கு மேலும் ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. ஏப்ரல் 28 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்த பின்னர், சாலை மார்க்கமாக கோவிலை அடைந்த அவர், அங்கு அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து சீரடிக்கு சென்று சாய்பாபாவை வழிபட்டு இருந்தார் விஜய்.
இதையும் படிங்க: என்னவா இருக்கும்..? "சின்னதம்பி உன்னை நம்பி காத்திருக்கு இந்த நாடு"..! விஜய் போட்டோவுடன் பாடலை பகிர்ந்த இளையராஜா..!!
இந்த நிலையில் இன்று அன்னை வேளாங்கண்ணி பேராலயத்தில் விஜய் வழிபாடு மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று அதிகாலை நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் விஜய் பங்கேற்பார் என்றும் இதைத் தொடர்ந்து நாகூர் தர்காவிற்கு செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனிடையே, விஜயின் வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்கா பயணம் ரத்து செய்யப்பட்டது. பயணம் வேறு ஒரு தேதிக்கு மாற்றப்பட்டது. இதனால் விஜயை காண காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையும் படிங்க: அதிர்ச்சி சம்பவம்..! ஸ்ரீரங்கம் தவெக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிப்பு..!! மர்ம நபர்கள் வெறிச்செயல்..!