வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஆகாய நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் அழகிய கொல்லிமலையில் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த அருவி, ஐயாறு ஆற்றின் மேற்பகுதியில் உருவானது. உயரத்தில் இருந்து மூலிகைகள் கலந்த தண்ணீரை கொட்டி, பார்வையாளர்களை மயக்கும். அறப்பளீஸ்வரர் கோவிலின் அருகில் அமைந்த இது, மலைகளுக்கிடையேயான ஒரு பள்ளத்தாக்கில் உள்ளதால், வானில் இருந்து நீர் விழுவது போன்ற காட்சியை அளிக்கிறது.

ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, அய்யாறு ஆற்றின் மீது 300 முதல் 600 அடி உயரத்தில் பள்ளத்தாக்கின் நடுவே உருவெடுக்கிறது. வானில் இருந்து கங்கை போல் விழும் நீர் கொட்டல் காட்சி, இதன் பெயருக்கு காரணம். மலைகளுக்கிடையே அழுத்தப்பட்டு வெளியேறும் இந்த வெள்ளம், கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைந்து, சிற்றாறுகளை உயிரூட்டுகிறது.
இதையும் படிங்க: டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு...! அவசர பொதுக்குழு கூட்டத்தில் முடிவு...!
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்புக் கருதி நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனத்துறை தடை விதித்து உள்ளது.
இதையும் படிங்க: கறார் காட்டிய போலீஸ்... இபிஎஸ்-ன் நாளைய பிரச்சாரம் ரத்து...! ஏன் தெரியுமா?