தமிழ்நாட்டில் ஆவின் பால் விலை உயர்வு தொடர்பாக சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் (கிரீன் மேஜிக் பால்) விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்த பால் விலை குறைப்பை நிறைவேற்றாமல் அதற்கு பதிலாக விலையை இருமடங்கு உயர்த்தியுள்ளதாகவும் பதிவுகள் வைரலாக பரவின. இந்த செய்திகள் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
இதற்கு உடனடியாக தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் இயங்கும் தகவல் சரிபார்ப்பகம் தெளிவான விளக்கம் அளித்தது. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை எவ்வித உயர்வுக்கும் உட்படுத்தப்படவில்லை என்பதை அரசு உறுதிப்படுத்தியது. இதனிடையே, ஆவின் பால் விலையேற்றம் என வெளியிடப்படும் செய்தி முற்றிலும் தவறு மற்றும் ஆதாரமற்றது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நாளென்றுக்கு ஆவின் மூலம் 31 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது என்றும் குறிப்பாக, சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 15 இலட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள்., 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமார் 860 சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: நெருங்கும் பொங்கல் விழா... 22 ஆயிரம் கூடுதல் பேருந்துகள்... போக்குவரத்து கழகம் அறிவிப்பு...!
ஆவின் மூலம் பொது மக்களுக்கு சமன்படுத்தப்பட்ட பால், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், நிறைகொழுப்பு பால் மற்றும் டிலைட் பால் என ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளது. தமிழ்நாடு முழுவதும், ஆவின் பால் விலை மற்றும் வகைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தங்கு தடையின்றி ஆவின் பால் அனைத்து பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறியது.
இதையும் படிங்க: போராட்டம் தொடரும்... பேச்சுவார்த்தைக்கு பின் இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டம்...!