கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்திப்பாக்கத்தில் டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயுதப்படை காவலர் மாதவன் என்பவரது குடும்பத்தினர் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், அவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் ஆயுதப்படை காவலர் மாதவன் என்பவர் தனது குடும்பத்தோடு திருவண்ணாமலைக்கு காரில் சென்றுள்ளார். திருக்கோவிலூர் அருகே அத்திப்பாக்கம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் நிலை தடுமாறிய கார் கவிழ்ந்து அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்துள்ளது. இந்த விபத்தில், மாதவன் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆயுதப்படை காவலர் மாதவன் படுகாயங்களுடன் உயிர்த்தப்பிய நிலையில், சங்கீதா, சுபா, தனலட்சுமி, ராகவேந்திரன் ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையும் படிங்க: தெலங்கானா: ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 37ஆக உயர்வு..!
பின்னர் அருகில் இருந்தவர்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்த நிலையில் காயம் அடைந்தவர்கள் அனைவரையும் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றன.
காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாலையைக் கடக்க முயன்ற மாணவர்கள் மீது வேகமாக மோதிய கார்... 12 பேரின் நிலை என்ன?