சமீப காலங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இமெயில் மூலமும் செல்போன் அழைப்புகள் மூலமும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட வருகின்றன.
பள்ளிகள், கல்லூரிகள், முக்கிய வணிக வளாகங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரது வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், என பலரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சமீபத்தில் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை செல்போன் எண்ணை கொண்டு போலீசார் கைது செய்தனர்.

டிபிஐ அலுவலகம், சென்னை உயர்நீதிமன்றம், வானிலை ஆய்வு மையம் என பல இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகின்றன. இந்த சம்பவங்களுக்கு எப்போது தான் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்
இதையும் படிங்க: தமிழகமே பரபரப்பு... ஒரே நேரத்தில் 3 அமைச்சர்கள் வீடுகளுக்கு பறந்த போலீஸ் படை...!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னை அபிராமிபுரத்தில் உள்ள அவர் அது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இமை மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதனை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: மீண்டும் பதற்றம்... நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!