தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகம், விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவற்றுக்கு இடையே மூன்றாவது துருவமாக உருவெடுத்த த.வெ.க., விஜய்யின் மக்கள் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கட்சி தொடங்கிய காலம் முதலே விஜய் தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான தேவையை வலியுறுத்தி வந்தார். ஊழல், நிர்வாகத் திறன் குறைபாடு, இளைஞர்கள் வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மாற்றம் ஆகியவற்றை முன்னிறுத்திய த.வெ.க., தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தானே போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் வாக்குகளை வாரி குவித்துள்ளனர். வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றார். தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். புதிய மாற்றம்! வளர்ச்சிக்கான மாற்றம்! என்பனவற்றை தங்கள் வாக்குப் புரட்சியால் சாதித்துக் காட்டி, தமிழக வெற்றிக் கழகத்தை மாபெரும் சரித்திர வெற்றி பெற வைத்த தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மாற்றத்தின் புயல்: பழைய அரசியல் மரபுகள் வீழ்ச்சி! - ஆதவ் அர்ஜுனா..!!
அதிகார மிரட்டல்கள், ஆண்ட கட்சியினர் கொடுத்த நெருக்கடிகள், வாக்குகளுக்காக வாரி இறைக்கப்பட்ட ஊழல் பணம் என்பதை எல்லாம் முற்றிலும் புறந்தள்ளி, நல்லதொரு மாற்றத்தை தொடங்கி வைத்துள்ள தமிழக வாக்காளர்களின் நேர்மையை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறினார். வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட என்னை, தங்கள் வீட்டில் ஒருவனாக, அண்ணனாக, தம்பியாக, மகனாக நினைத்து வெற்றி பெற வைத்த வில்லிவாக்கம் வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை நெருங்கியாச்சு..! கூடுதல் பாதுகாப்பு கொடுங்க..! ஆதவ் வலியுறுத்தல்..!!