தெருக்கள் மற்றும் சாலைகளில் உள்ள ஜாதிப் பெயர்கள் நீக்கி, மாற்றுப் பெயர் வைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் எடுத்துக்காட்டு பட்டியலையும் வெளியிட்டது. இதனை சுட்டிக்காட்டி அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
பசும்பொன்னார், தீரன் சின்னமலை, இரட்டைமலை சீனிவாசன், வ.உ. சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், ம.பொ. சிவஞானம் ஆகியோர் சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றியவர்கள் இல்லையா என்றும் சாலைகளுக்கு அத்தகைய தலைவர்கள் பெயரை வைக்காமல், தமிழ்நாட்டை பாழ்படுத்திய கருணாநிதியின் அடைமொழியைத் தான் சாலைகளுக்கு சூட்ட வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பி உள்ளது.
26 ஆண்டுகள் நம் தமிழகத்தில் ஆட்சி புரிந்து, பொற்கால ஆட்சி வழங்கி, மக்கள் மனதில் இன்றும் என்றும் வாழும் நம் இருபெரும் தலைவர்களான புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆகியோர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கை விட கருணாநிதி என்ன கிழித்தார் என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் இபிஎஸ்... யோசிச்சு பேசுங்க! அமைச்சர் எ.வ. வேலு பதிலடி...!

தமிழகத்தின் உரிமைகளை எல்லாம் தாரை வார்த்துவிட்டு, இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காரணமாக இருந்த தமிழினத் துரோகியின் பெயரை சாலைக்கு சூட்டி, தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் தலைவர்களைப் புறக்கணிக்கும் திமுக அரசின் காழ்ப்புணர்ச்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சாலைகளுக்கு உள்ள தலைவர்களின் பெயரை இந்த அரசாணையை சாக்காகக் கொண்டு நீக்க முயற்சித்தால், தமிழக மக்களின் கடும் எதிர்ப்புக்கும் கொந்தளிப்புக்கும் இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் உழைத்த அத்தனை தலைவர்களுக்கும் உரிய அங்கீகாரம் அளித்து, இப்பட்டியலில் அவர்களை இணைத்து மறு அரசாணை வெளியிட வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தென்னமர சின்னத்துல ஒரு குத்து… பனை மர சின்னத்துல ஒரு குத்து… யாரு சாமி நீ? கலாய்த்த அதிமுக…!