தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின் ஒன்றான திராவிட முன்னேற்றக் கழகம் 1949 ஆம் ஆண்டு சி.என். அண்ணாதுரையால் தொடங்கப்பட்ட கட்சி. திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மையமாகக் கொண்டு, சமூக நீதி, மொழி உரிமை, மற்றும் மாநில உரிமைகளுக்காகப் பாடுபடுவதாகக் கூறி வருகிறது. இருப்பினும், கடந்த சில தசாப்தங்களாக திமுக மீது வாரிசு அரசியல் என்ற விமர்சனம் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. வைகோவை திமுகவிலிருந்து நீக்கியது குறித்து, ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
அதன்பிறகு 2021ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டது, வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்களுக்கு மேலும் வலு சேர்த்தது. கலைஞர் கருணாநிதி கட்சியின் தலைவராக இருந்தார். அவரை தொடர்ந்து அவரது மகன் ஸ்டாலின் தற்போது முதலமைச்சராக இருக்கிறார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக இருந்து வருகிறார். இப்படி கட்சியில் முக்கிய பங்கு வகிப்பவர்களுக்கு கூட பதவி கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது.

அதிமுக சார்பில் தற்போது ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகனே துணை முதல்வர் ஆக முடியாது என்றும் அங்கு துணை முதல்வர், முதல்வர், தலைவராக வேண்டுமென்றால் அதற்கு கருணாநிதி குடும்ப ஆண் வாரிசாக தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. சக்திவேல் போன்ற திமுக தொண்டர்கள் உழைத்து உழைத்து நலிவடைந்து போனாலும், அதையும் வைத்து விளம்பரம் தேடுவது எப்படி என்பதை மட்டும் தான் அந்த கட்சி நினைக்கும் என்று விமர்சித்துள்ளது.
உழைக்கின்றவர்களை உயர்த்தும் ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான் என்றும் அதற்கு நம்மில் ஒருவராக இருந்து, கிளைச் செயலாளராக தன் அரசியல் வாழ்வை தொடங்கி, அதிமுகவை வழி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை இதற்கு சாட்சி என்றும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: ஆயிரம், ஆயிரம் கோடிகளுக்கு ஊழல்... சபரீசனா? உதயநிதியா? குழப்பம்; திமுகவை மிரளவைத்த அமித் ஷா...!
இதையும் படிங்க: படங்கள் பெட்டிக்குள்ள தூங்குது... உதயநிதி ஸ்டாலினுக்கு தான் எல்லா பெருமையும்! விளாசிய இபிஎஸ்