தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார். இந்த சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கருப்பொருளில் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து அவரது சுற்றுப்பயணம் தொடங்கிய நிலையில், ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடையும் என கூறப்பட்டது. ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மற்றும் பேராவூரணி தொகுதிகள் இவற்றில் அடங்குகின்றன. தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது. இன்றைய சுற்றுப்பயணத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, திமுக ஆட்சி திரைப்படத்துறையையும் விட்டு வைக்கவில்லை என்றும் 120 படங்கள் பெட்டியிலேயே தூங்குவதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் தான் எனவும் கூறினார்.

திமுக அரசு திட்டங்களை அறிவித்து குழுக்களை போடுவதோடு சரி செயல்படுத்துவதில்லை., 52 குழுக்களை அமைத்தது தான் மிச்சம் எனவும் தெரிவித்தார். அடிமாட்டு விலைக்கு தராததால் திரைப்படங்களை வெளியிட முடியவில்லை என்றும் கூறினார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவை பெரும்பாலும் திரைப்படத் துறையில் ஆதிக்கம், நிதி முறைகேடுகள், மற்றும் அரசியல் செல்வாக்கு பயன்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக உள்ளது. பல முக்கிய படங்களை விநியோகிக்கும் இந்நிறுவனம், தயாரிப்பாளர்களை மிரட்டி குறைந்த விலையில் படங்களை வாங்குவதாகவும், சந்தையை கட்டுப்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடன் வாங்குவதில் சூப்பர் CM... விலைவாசி பட்டியலை எடுத்து பாருங்களேன்! ஸ்டாலினை கிழித்தெடுத்த எடப்பாடி!
இதையும் படிங்க: கூட்டணி ஆட்சிதான்! ஒரு இன்ச் கூட நகராத அமித் ஷா... தர்மசங்கடத்தில் அதிமுக!