முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு தலைநிமிர்ந்ததா என்ற கேள்வியை அதிமுக முன்வைத்துள்ளது. பேரறிஞர் அண்ணா ஆட்சியில் தமிழ்நாடும் தமிழினமும் தலைநிமிர்ந்தது அது மறுக்க முடியாத உண்மை என்றும் ஆனால் அதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆனால் இன்று உங்கள் ஐந்தாண்டு ஆட்சியில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் தலைநிமிர்ந்தா இருக்கிறார்கள் என்றும் கேட்கப்பட்டுள்ளது. நாள்தோறும் காலையில் எழுந்து செய்தித்தாளையோ இல்லை தொலைக்காட்சி செய்திகளையோ பார்த்தால் மக்கள் தலைநிமிர்ந்து நடக்கும்வண்ணமா உள்ளது என்று சரமாரி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முன்தினம் நாங்குநேரி.. நேற்று சிவகங்கை.. இன்று மானாமதுரை.. இப்படி தினம் தினம் மக்கள் மீதான கொலைவெறி தாக்குதல் அதிகமாகிக் கொண்டே போகிறதே அதை நினைத்து தமிழனம் தலைநிமிர வேண்டுமா என்று அதிமுக சாடியுள்ளது.

இல்லை மதுரையில் கல்லூரி வாகனத்தை போதை ஆசாமிகள் சூழ்ந்து நின்று தாக்கியதை நினைத்து பெருமிதம் கொண்டு தமிழ்நாட்டு பெண்கள் தலைநிமிர வேண்டுமா என்று கேட்டுள்ளது. இப்படி போதை ஆசாமிகளால் தமிழ்நாட்டு மக்கள் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாகி தலை தொங்கும் சூழ்நிலையில் எப்படி தமிழ்நாடும் தமிழினமும் தலைநிமிரும் என்றும் உங்கள் ஆட்சியில் மக்கள் அவர்களின் உயிரை காத்துக் கொள்ள இனி வெளிநாடுகளை போல பதுங்குகுழிகளை தான் உருவாக்க வேண்டும் போல என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வந்தாச்சு ராஜ்யசபா எலெக்ஷன்... வேட்பு மனுக்கள் பரிசீலனை தீவிரம்..!!
வெளிநாடுகளுக்கு இணையான வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது என அப்போது நீங்கள் கூறியது புரியவில்லை ஆனால் இப்போதுதான் புரிகிறது என்று. இதில் over...over... என சைகை வேறு... Over தான் ஸ்டாலின் சார்., உங்கள் விடியா ஆட்சி over தான்.. உங்கள் பொம்மை ஆட்சியின் ஆயுட்காலம் over தான்.. இனி உங்கள் ஆட்சிக்கனவு ஓவரோ ஓவர்தான் என்றும் அதிமுக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவே வியந்து பார்க்கும் கனவு ஆட்சி... முதல்வர் ஸ்டாலினுக்கு டிஆர்பி ராஜா புகழாரம்..!!