மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற மக்களை சந்தித்து உரை நிகழ்த்துவது உடன், விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அப்போது, பாபநாசத்தில் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். நாட்டு மக்களை பற்றி கவலைப்படாமல் வீட்டு மக்களை பற்றிய சிந்திப்பவர் முதலமைச்சர் என்றும் இப்போது பாபநாசம் வந்திருக்கிறேன், தனக்கு கிடைக்கும் வரவேற்பு வேண்டுமானால் அமைச்சர் நேரு லைவில் பார்க்கட்டும் என்றார்.
திமுக ஆட்சியில் சிறுமி முதல் பாட்டு வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் எனவும் இப்போது இருக்கும் முதலமைச்சர் திறமையற்ற முதல்வர் என தெரிவித்துள்ளார். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் 2026ல் ஆட்சியமைக்கும் என கூறினார். திமுக கனவு பகல் கனவாக மாறும் என்றும் திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது என்றும் வேளாண்மைக்கான நீர் மேலாண்மை அதிமுக அரசு சிறந்து விளங்கியதாகவும் தெரிவித்தார்

விவசாய மக்களுக்காக நன்மை தரும் ஒரு திட்டமாவது திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். தினமும் காலையில் போட்டோ ஷூட் நடத்தி முதலமைச்சர் நாட்களை வீணடித்து விட்டார் என்றும் போட்டோ ஷூட் மூலம் 50 மாத காலத்தை ஓட்டிவிட்டார் முதல்வர் எனவும் விமர்சித்தார். கொரோனா உள்ளிட்ட சோதனை காலகட்டங்களிலும் அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்ததாகவும், மழை, வெள்ளம், புயல் நேரங்களிலும் உயர் வேகத்தில் செயல்பட்டது அதிமுக அரசியல் என்றும் கூறினார். அனைத்து சோதனை காலங்களிலும் சிறப்பாக செயல்பட்டு அதிமுக மக்கள் உயிரை காத்தது என்றும் அதிமுக ஆட்சியில் 11 மாதம் விலையில்லா பொருட்களை ரேஷன் கடையில் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சொந்த தொகுதி மக்கள் வாக்குறுதியை கூட நிறைவேற்றாதவர் இபிஎஸ்..! திமுக குற்றச்சாட்டு..!
இதையும் படிங்க: கடை விரிச்சும் வியாபாரம் ஆகலையே! இபிஎஸ் கூட்டணி அழைப்பை விமர்சித்த அமைச்சர் துரைமுருகன்..!