திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முன்னாள் அதிமுக அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தியின் கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
சிறிது நேரத்திலேயே விபத்து நடந்ததற்கான தடயங்கள் மறைக்கப்பட்டு, காயமடைந்த இளைஞருக்கு ரகசியமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
வரும் 19-ம் தேதி எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலைக்கு வர உள்ள நிலையில், அவரை வரவேற்கும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி
இதையும் படிங்க: ரஷ்யாவில் அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கிய விமானம்.. 49 பேரின் கதி என்ன..??
செங்கத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற இவரது கார், திருவண்ணாமலையிலிருந்து செங்கம் நோக்கி வந்த அருண் என்ற இளைஞரின் இருசக்கர வாகனம் மீது கொட்ட குளம் பகுதியில் மோதியது.
இந்த விபத்தில் அருண் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
விபத்து நடந்தவுடன், முன்னாள் அமைச்சருடன் வந்தவர்கள் காயமடைந்த அருணை உடனடியாக அங்கிருந்த ஒரு காரில் ஏற்றிச் சென்றதாகவும், அருணின் இருசக்கர வாகனத்தையும் அப்புறப்படுத்தி மறைக்கப்பட்டுள்ளது
விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் விபத்து நடந்ததற்கான எந்தத் தடயமும் இல்லாமல் மறைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த அருணை செங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ரகசியமாக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சரின் காரும், அவரும் சில நிமிடங்களிலேயே அப்பகுதியிலிருந்து சென்றுவிட்டனர்.
திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொட்டகுளம் பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த விபத்து, உடனடியாக மறைக்கப்பட்டதும், காயமடைந்த இளைஞரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்காமல் தனியார் மருத்துவமனையில் ரகசியமாக சிகிச்சை அளித்ததும்,மீண்டும் மருத்துவமனையில் இருந்து அருணை வேறொரு காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்
செங்கம் காவல்துறைக்கு விபத்து பற்றிய தகவல் தெரிவிக்கப்படாமல் வாகனம் அகற்றப்பட்டதும் அப்பகுதி மக்களிடையே பெரும் குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
படுகாயமடைந்த இளைஞருக்கு செங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரகசியமாக சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரின் இருசக்கர வாகனத்தை மறைக்கப்பட்டும் விபத்துக்குள்ளான இளைஞர் யார் என்பதை தெரியாத நிலையில்
இந்த விபத்து மற்றும் அதை மறைக்க முயற்சித்த சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிகாலையிலேயே பயங்கரம்.. சுற்றுலா வேன் மீது வேகமாக மோதிய லாரி.. 2 பேர் பலி...!