தமிழக அரசியலில் ஜெ. ஜெயலலிதா என்ற பெயர் என்றென்றும் ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறது. அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்ட அவரது வாழ்க்கை, சினிமாவில் இருந்து அரசியல் வரை பல சுவாரசியமான திருப்பங்களால் நிறைந்தது. ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல கேள்விகள் உள்ளன. அதிலேயே மிகப் பெரிய பேசுபொருளாக இருப்பது அவருக்கு ஒரு மகள் இருந்ததா? என்ற கேள்விதான்.
இந்தக் கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்பி வருபவர்களில் ஒருவர் தான் ஜெயலட்சுமி. ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான் தான் என்று பல ஆண்டுகளாக இவர் கூறி வருகிறார். 2023-ஆம் ஆண்டு கொடைக்கானலில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஜெயலலிதாவுடன் தான் இரண்டு முறை நேரில் சந்தித்ததாகவும், அவரே தன் தாய் என்றும் உரத்துப் பேசினார். அப்போது அவர் ஜெயலலிதா போன்ற உடை, மேக்கப் அணிந்து வந்திருந்தது கூடுதல் கவனத்தை ஈர்த்தது.

இவர் வெறும் பேச்சோடு நிற்கவில்லை. 2023 செப்டம்பரில் அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியதாக அறிவித்தார். 2024 லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் அப்போது கூறினார். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டபோது, நான் ஜெயலலிதாவின் மகள் என்று சொல்வதால் எனக்கு தடங்கல் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்... 2வது நாளாக வேட்பாளர் நேர்காணல் நடத்தும் EPS..!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் நேர்காணல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஜெயலக்ஷ்மி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாகவும், அதற்கான நேர்காணலுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது. அப்போது, அவரை அதிமுகவினர் வெளியே விரட்டினர்.
இதையும் படிங்க: அனல் பறக்கும் தேர்தல் களம்... வரும் 23ல் பிரதமர் மோடி மதுரை வருகை...!