தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடங்கிய 2021 மே மாதம் முதல், அதிமுக கட்சி தொடர்ந்து மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அவர்களின் முதன்மையான குற்றச்சாட்டு, திமுக அரசு மக்களின் வரிப்பணத்தைப் பெருமளவில் கொள்ளையடித்து வருவதாகும். இந்தக் குற்றச்சாட்டுகள் கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அடிக்கடி வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் ஒரு விரிவான ஆவணத்தை சமர்ப்பித்தார். அதில், கடந்த 56 மாதங்களில் திமுக அரசு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்து, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்தத் தொகை பல்வேறு துறைகளில் நடைபெற்றதாகக் கூறப்பட்டது.

நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைகள், மின்சாரம், மது விற்பனை, குடிநீர் வழங்கல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகளில் பெருமளவு ஊழல் நடந்ததாகவும், ஒவ்வொரு துறையிலும் குறிப்பிட்ட தொகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் விவரங்கள் அளிக்கப்பட்டன. திமுக அரசு ஒரு ஜனநாயக அரசாக இல்லாமல், தனியார் நிறுவனம் போன்று இயங்கி வருவதாகவும், குடும்ப ஆதிக்கம் மற்றும் ஊழல் மூலம் மாநிலத்தை கடன் சுமையில் ஆழ்த்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. கடந்த காலத்தில் ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு, மொத்த கடன் சுமை 4 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது என்றும், இதற்கு ஊழலே முக்கிய காரணம் என்றும் வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: டூரிஸ்ட்டுளுக்கு பாதுக்காப்பான மாநிலம் தமிழ்நாடு... உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை..!
பல லட்சம் கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து தங்கள் பரம்பரையின் வாழ்வை மட்டுமே வளப்படுத்தும் நோக்கில் திமுக செயல் பட்டு வருவதாக அதிமுக குற்றச்சாட்டி இருக்கிறது. அல்லும் பகலும் 'கரப்ஷன், கமிஷன், கலக்ஷன்' என்று செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கிவிட்டது என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!