தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் மீதான உரையை நிதி அமைச்சர் மரிய வில்சன் நிகழ்த்தினார். பத்து ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் மாநிலம் முழுவதும் அமைப்பதற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் வெல்லும் 200 விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்க 22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக கிராமிய விளையாட்டு போட்டிகள் நடத்த 42 கோடி முடிக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு பயிற்சிகள் வழங்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு 1051 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் வகுப்புகள் முடிந்த பின்பு ஒரு மணி நேரம் உடற்கல்வி பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சமூக நீதித்துறையில் அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை வழங்க 131 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாய பொருட்கள் வாங்கும் மண்ணின் மகள் திட்டத்திற்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிட குடியிருப்புகளில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த தமிழக பட்ஜெட்டில் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஸ்சி எஸ்டி விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்ற 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிடர்களுக்கு மூலதன மானியம் மற்றும் கடன் வழங்க 165 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டில் சமூக நீதித்துறைக்கு 3937 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டு திட்டத்திற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!
ஹஜ் பயணத்திற்கான மானியம் 35 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் சமவாய்ப்பு திட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த 462.41 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு 1.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணன் சீர் திட்டத்திற்காக 812 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கபர்ஸ்தான்கள் மற்றும் கல்லறை தோட்டம் மேம்பாட்டிற்காக 34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களின் திருமணத்திற்காக 8 கிராம் தங்கம், பட்டு சேலை வழங்கும் அண்ணன் சீர் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கருப்பு கோட்டை கழட்டி வீசிய விஜய்... சி.எம்-ன் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?