• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சர்ச்சைகள், விமர்சனங்கள், பேரங்கள், ஊழல்கள்... லிஸ்ட் போட்டு தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தவெக அரசு யூ டர்ன் அடித்து மக்களுக்கு மாற்றத்தை பதிலாக ஏமாற்றத்தை தந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்
    Author By Amaravathi Fri, 23 Oct 2026 11:33:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK RB Udayakumar criticize TVK government

    அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தலைமையிலான தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இன்று தவெக அரசை விமர்சித்து வெளியிட்டுள்ள வீடியோவில், விஜயின் ஆலோசகர்கள், அமைச்சர்கள், ஜோதிடர்கள், ஓட்டுநர்கள் என பவர் சென்டர்கள் இந்த 5 மாதங்களில் தமிழகத்தில் புகுந்து விளையாடுகின்றன. சர்ச்சைகள், விமர்சனங்கள், பேரங்கள், ஊழல்கள் என தவெக அரசில் தலைவிரித்தாடுகின்றன.

    “மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொடமாட்டோம்; தொட்டவனையும் விடமாட்டோம்” என்ற விஜயின் கொள்கை தற்போது தவெக அரசில் யூ டர்ன் அடித்து நிற்கிறது.

    இதையும் படிங்க: “சட்டம் ஒழுங்கை காப்பாத்த முடியல... ஆனா....” - விஜய் அரசை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    தவெக அரசு யூ டர்ன் அடித்து, மக்களுக்கு மாற்றத்திற்குப் பதிலாக ஏமாற்றத்தைத் தந்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    மே 10ஆம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்று, அன்று உறுதிமொழி ஏற்ற விஜய், “ஜெயித்து விட்டோம், ஒரு ஆட்டத்தை ஆடிவிடுவோம் என நினைத்தால் இந்த நிமிஷமே அழித்துவிடுங்கள். இங்கு ஒரே பவர் சென்டர் நான் மட்டும்தான்” என்று கூறினார்.

    ஆனால், இன்றைக்கு தவெக அரசில் 5 மாதங்களில் பவர் சென்டர்கள் தலைவிரித்தாடுகின்றன. முதல்வரின் ஆலோசகர்கள், அமைச்சர்கள், முதல்வரின் உதவியாளர்கள், நண்பர்கள், ஜோதிடர், ஓட்டுநர், குறிப்பிட்ட அதிகாரிகள் சிலர் என தவெக ஆட்சியில் பவர் சென்டர்களுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது. இந்தப் பவர் சென்டர்கள் கடந்த ஐந்து மாத காலமாகப் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கின்றன.

    கடந்த காலத்தில் ஆட்சியாளர்களின் பவர் சென்டர்களால்தான் ஆட்சி பறிபோய், ஆட்சிக்கு எண்ட் கார்டு போடப்பட்டது என்பதை மறந்துவிட்டு, இந்தப் பவர் சென்டர்களின் ஆட்டம் இன்றைக்குத் தமிழகத்தில் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன் முதல்வர் விஜய் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் மக்களின் கேள்வியாக இருக்கிறது.

    அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பணம் பெற்றதாக எழுதப்பட்ட குற்றச்சாட்டு, தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து மின்சாரத் துறையில் மின் கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத மின்வெட்டு, தற்போது மின் கொள்முதல் எனக் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

    4,500 மெகாவாட் கொள்முதல் என்று முதலில் டெண்டர் வெளியிட்டு, பின்னர் கடும் சர்ச்சை எழுந்தபோது 300 மெகாவாட்டாக அதைக் குறைத்து, இப்போது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இன்றி, மாதம் 1,000 மெகாவாட் வீதம் 7 மாதங்களுக்கான டெண்டர் ஒன்று வெளியிடப்பட்டது.

    இதில் என்ன சர்ச்சை என்றால், ஒரு யூனிட் மின்சாரம் தற்போது மும்பை போன்ற மாநிலங்களில் ரூபாய் 13 முதல் 15 ரூபாய் வரை குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த கால ஆட்சியாளர்கள் கொள்முதல் செய்த விலையை விமர்சித்த மின்சாரத் துறை அமைச்சர், தற்போது தூய சக்தி தவெக அரசு, மக்கள் பணத்தில் ஏன் ஒரு யூனிட் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து, அதாவது 35 ரூபாய் கொடுத்து வாங்குகிறது என்பதுதான் முரட்டுச் சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

    காற்றாலை மின்சாரம் தயாரிக்கத் தனியாருக்கு ஒப்புதல் வழங்க, ஒரு மெகாவாட்டுக்கு 15 லட்சம் என்னும் கமிஷன் பெறப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் புதிய நர்சிங் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு, தலா ஒரு கல்லூரிக்கு 75 லட்சம் தரப்பட்டிருப்பதாகவும் சர்ச்சையாக உள்ளது.

    மதுரையில் தவெக கட்சிப் பதவிக்கு கமிஷன் வாங்கும் ஆடியோ வெளியாகி, தவெக கட்சிக்குப் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு புறத்தில், நாகப்பட்டினத்தில் 135 கிலோ போதைப்பொருளை மத்திய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்து, தவெக நிர்வாகி பூபாலன் மற்றும் அவரது கூட்டாளிகளும் மூளையாகச் செயல்பட்டிருப்பது தவெக மானம் காற்றில் பறக்கிறது.

    தவெக கட்சியில் கட்சிப் பதவிக்குப் பணம் கேட்பது தவெகவுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தவெக நிர்வாகிகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது தவெகவின் மானம் காற்றில் பறக்கிறது. பேரம், போதைப்பொருள் கடத்தல், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுதல், சம்பவங்கள் உள்ளிட்ட விவகாரங்களால் நிர்வாகிகள் தவெகவின் தலை உருளுகிறது.

    தவெக கட்சி தொடங்கியதிலிருந்து சர்ச்சைகள் வரிசை கட்டி நிற்கின்றன. முதல் சர்ச்சையாக, விஜய்யின் ஆஸ்தான ஜோதிட ஆலோசகரான ரத்தன்பண்டிட்டை அரசு அதிகாரியாக நியமித்ததில் பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்ததால், அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது.

    அதிலிருந்து அரசாணை வெளியிடுவதில் மர்மம் நீடித்து வருகிறது. பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அரசாணை வெளியிட்டது? இதுபோன்ற சர்ச்சைகள் நீடித்து வருகின்றன.

    இவ்வளவு சர்ச்சைகள், விமர்சனங்கள், பேரங்கள், ஊழல்கள் தவெக அரசில் தலைவிரித்தாடுகிறபோது, முதல்வருக்குத் தெரிந்துதான் இவை எல்லாம் நடக்கின்றனவா? இல்லை, அவருடைய கவனத்திற்கு வரவில்லையா? என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால், இதுகுறித்தும் முதல்வர் வாய் திறக்கவில்லை.

    இதுகுறித்து எடப்பாடியார், ஏன் முதல்வர் விஜய் மௌனசாமியாராக உள்ளார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஆகவே, மக்களே, நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த 5 மாதங்களில் தவெக ஆட்சியினுடைய தடுமாற்றத்தை நீங்கள் பார்த்துக் கொண்டுள்ளீர்கள். “மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொடமாட்டோம்; தொட்டவனையும் விடமாட்டோம்” என்ற விஜயின் கொள்கை தற்போது தவெக அரசில் யூ டர்ன் அடித்து நிற்கிறது.

    மொத்தமாக, தவெக அரசு யூ டர்ன் அடித்து, மக்களுக்கு மாற்றத்திற்குப் பதிலாக ஏமாற்றத்தைத் தந்துள்ளது எனக் கூறினார்.

    இதையும் படிங்க: “பொய்யிலே பிறந்து... பொய்யிலே வளர்ந்த...” - எம்.ஜி.ஆர். பாடலை சுட்டிக்காட்டி விஜய் அரசை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் படிங்க
    6 முதல் 12-ஆம் வகுப்பு வரை வினாத்தாள் கட்டணம் வசூலிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு!

    6 முதல் 12-ஆம் வகுப்பு வரை வினாத்தாள் கட்டணம் வசூலிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் ரெய்டு..! அரசு அலுவலகங்களில் பரபரப்பு..!

    தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் ரெய்டு..! அரசு அலுவலகங்களில் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    மக்களை பிளவுபடுத்தும் சக்திகளை முறியடிக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம்.. பிரதமர் மோடி பேச்சு..!!

    மக்களை பிளவுபடுத்தும் சக்திகளை முறியடிக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம்.. பிரதமர் மோடி பேச்சு..!!

    இந்தியா
    ஊருக்கு தான் உபதேசமா விஜய்.? கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..! தவெகவை சாடிய கனிமொழி எம்பி..!

    ஊருக்கு தான் உபதேசமா விஜய்.? கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..! தவெகவை சாடிய கனிமொழி எம்பி..!

    தமிழ்நாடு
    தனுஷை சுற்றி அரசியல் கணக்கு? அடிபடும் அர்ஜுன் மூர்த்தி பெயர்.. ரஜினி சொன்னது என்ன?

    தனுஷை சுற்றி அரசியல் கணக்கு? அடிபடும் அர்ஜுன் மூர்த்தி பெயர்.. ரஜினி சொன்னது என்ன?

    தமிழ்நாடு
    பள்ளிகளில் சமூகநீதி மாணவர் படை அமைக்க வேண்டும்: விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    பள்ளிகளில் சமூகநீதி மாணவர் படை அமைக்க வேண்டும்: விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    6 முதல் 12-ஆம் வகுப்பு வரை வினாத்தாள் கட்டணம் வசூலிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு!

    6 முதல் 12-ஆம் வகுப்பு வரை வினாத்தாள் கட்டணம் வசூலிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் ரெய்டு..! அரசு அலுவலகங்களில் பரபரப்பு..!

    தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் ரெய்டு..! அரசு அலுவலகங்களில் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    மக்களை பிளவுபடுத்தும் சக்திகளை முறியடிக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம்.. பிரதமர் மோடி பேச்சு..!!

    மக்களை பிளவுபடுத்தும் சக்திகளை முறியடிக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம்.. பிரதமர் மோடி பேச்சு..!!

    இந்தியா
    ஊருக்கு தான் உபதேசமா விஜய்.? கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..! தவெகவை சாடிய கனிமொழி எம்பி..!

    ஊருக்கு தான் உபதேசமா விஜய்.? கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..! தவெகவை சாடிய கனிமொழி எம்பி..!

    தமிழ்நாடு
    தனுஷை சுற்றி அரசியல் கணக்கு? அடிபடும் அர்ஜுன் மூர்த்தி பெயர்.. ரஜினி சொன்னது என்ன?

    தனுஷை சுற்றி அரசியல் கணக்கு? அடிபடும் அர்ஜுன் மூர்த்தி பெயர்.. ரஜினி சொன்னது என்ன?

    தமிழ்நாடு
    பள்ளிகளில் சமூகநீதி மாணவர் படை அமைக்க வேண்டும்: விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    பள்ளிகளில் சமூகநீதி மாணவர் படை அமைக்க வேண்டும்: விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share