• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “பொய்யிலே பிறந்து... பொய்யிலே வளர்ந்த...” - எம்.ஜி.ஆர். பாடலை சுட்டிக்காட்டி விஜய் அரசை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    பேரிடர் காலங்களிலே ரீல்ஸை முதலீடாக வைத்து,  ரியலை பின்னுக்கு தள்ளிவிட்டால், மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 
    Author By Amaravathi Wed, 21 Oct 2026 12:38:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-rb-udayakumar-slams-cm-vijay-EHMR4D

    முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், தவெக  ஆட்சி, தூய ஆட்சி, மிஸ்டர் கிளீன் ஆட்சி என்றெல்லாம் உத்தரவாதம் தந்தார் முதல்வர் விஜய்,  தற்போது இந்த 5 மாத காலத்திலே 100 கோடி ரூபாய் கிரிஸ்டல் மெத்தப்பட்டமை போதை பொருள் கடத்தல் வழக்கில் தவெக கட்சியின் செயற்குழு உறுப்பினர் பூபாலன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம், பெரும் அதிர்வலையை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

    பூபாலனுக்குப் பின்னால் பெரிய நெட்வொர்க் இருப்பதை கண்டறிந்திருக்கும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் வரை இந்த வலைப்பின்னல் பறந்து விரிந்திருப்பதை அறிந்து, அதிர்ந்து போயிருக்கிறது அன்னை தமிழகம்.

    இது மட்டுமா? இன்னும் தவெக அரசில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் கருத்து கூறும்போது, நீதியரசர் சஞ்சய் குமார், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார், தமிழகத்தைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியதாக தவெகவினர் இணையதளத்தில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

    இதையும் படிங்க: “உடனே இதை செய்யுங்க...” - அமைச்சர்களை முகத்திற்கு நேராக பார்த்து சி.எம்.விஜய் அதிரடி உத்தரவு...!

    முதல்வர் ஜோசப் விஜய் தாராபுரத்திலே பிரச்சாரம் செய்தபோது, அந்தக் கூட்டத்தில் அதை முன்மொழிந்து, தவெக அமைச்சர் அருண்ராஜ், உச்ச நீதிமன்றமே தமிழக அரசை பாராட்டி இருப்பதாக குறிப்பிட்டு பேசினார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் அமைச்சர் செங்கோட்டையனின் தேர்தல் சம்பந்தமான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதியரசர் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதியரசர் சஞ்சய் குமார், உங்களின் முதல்வர் வேகமாக செயல்பட நினைக்கிறாரே, நீங்கள் ஏன் வழக்கை ஒத்திவைக்க கேட்கிறீர்கள்?" என்றுதான் நான் அன்றைக்கு சொன்னேன். ஆனால் அதைத் திரித்து, முதல்வர் விஜயைப் புகழ்ந்ததாக தவறாக சித்தரித்து, சமூக வலைதளங்களிலே வைரலாக்கி விட்டீர்கள்.

    இந்த நிலையிலே செங்கோட்டையனின் தேர்தல் தொடர்பான வழக்கை நான் விசாரிப்பது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது. எனவே இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கிறேன்" என்று கூறி, அந்த வழக்கிலிருந்து விலகிக் கொண்டார்.

    நீதி அரசர்  சஞ்சய் குமார் தவெக அரசின் சமூக வலைதளங்களுடைய அந்தப் பதிவு, எப்படி உண்மையை அடித்தளமாக வைத்திருக்கிறது என்பதற்கு  உச்ச நீதிமன்ற நீதியரசர்  இந்த கருத்தே சான்றாக இருக்கிறது.

    அத்தனையும் பொய். உண்மை என்பது எதுவுமே இல்லை, சாத்தியம் என்பது எதுவுமே இல்லை. அதற்கான முயற்சி என்பதும் எதுவும் இல்லை. ஆக, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே கட்டமைத்திருக்கிற ஒரு தவெக அரசு, சமூக வலைதளங்களின் வதந்திகளை மட்டும் வைத்து, இந்த அரசு அமைந்திருக்கிறது. 

    இந்த சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கங்களை எல்லாம் ஏற்படுத்தி வருகிறது என்பதற்கு, இந்த சம்பவத்தை நாம் சாட்சியாக எடுத்துக்கொண்டாலும், இன்றைக்கு இவையெல்லாம் நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், இப்போது இதைத் தொடர்ந்து அவர்கள் செய்து வருகிறபோது, இப்போது மக்களுக்கு என்ன அச்சம் ஏற்படுகிறது

    தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்து தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், அதன் விளைவாக தமிழகத்தின் 21 மாவட்டங்களிலே கனமழை வெளுத்து வாங்கப் போவதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. உடனடியாக முதல்வர் ஆய்வு செய்கின்ற ரீல்ஸ்கள் எல்லாம் வெளியே வந்திருக்கிறது. 

    மின்னல் வேகத்திலே மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெறுவதாக அரசின் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்படுகிறது. தமிழகத்திலே வடகிழக்கு பருவங்களில் தீவிரமடைந்துள்ளது. மழையால் சாலைகளின் நீர் தேங்குதல், போக்குவரத்து பாதிப்பு, தாழ்வான பகுதிகளிலே வெள்ள அபாயம் போன்ற பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கியுள்ளது. 

    ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன் கால்வாய்களை தூறுவார்த்தல், நீர் நிலைகளை பராமரித்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தாழ்வான பகுதிகளை கண்டறிதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தற்போது புதிய தவெக அரசு, மழை துவங்கிய பின்தான் இந்த அவசரகால பணிகளை அவசரமாக தொடங்கி இருப்பது இந்த ரீல்ஸ் அரசு இன்னும் ரியலை புரிந்து கொள்ளவில்லையா என்ற கவலை ஏற்படுகிறது.

    வெறும் பருவமழைகான எச்சரிக்கை அறிவிப்பதுடன், அரசின் கடமை முடிந்தது என இருந்து விடாமல், தவெக அரசு ,மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் முறையாக செயல்படுகின்றனவா?, அவசர மீட்பு மற்றும் நிவாரண உதவி குழுக்கள் தயார் நிலையிலே இருக்கின்றனவா?, மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா?, அதற்கு செல்லுகின்ற வழிகளும் பாதுகாப்பாக இருக்கின்றனவா? என்பதை எல்லாம் தொடர் கண்காணிப்பிலே வைத்துக்கொள்ள வேண்டும்.

    மரக்கிளைகள் முறிந்து விழும் அபாயம் உள்ள இடங்கள், வெள்ளம் சூழக்கூடிய சாலைகள், நீர் நிலைகளின் அருகே உள்ள ஆபத்தான பகுதிகள் ஆகியவற்றின் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்ய வேண்டும். நிவாரண முகாம்களிலும், உணவு வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி, சுகாதாரமான கழிப்பறைகள் உள்ளிட்ட வெள்ளக்கால நிவாரண முகாம்கள் அரசு தயார் நிலையிலே வைத்திருக்க வேண்டும். 

    இயற்கை பேரிடரை தடுக்க முடியாது. ஆனால் இயற்கை பேரிடரால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும். மழை வந்த பின்பு மழை நின்ற பின்பு ஆய்வு நடத்துவதை விட, மழை தொடங்குவதற்கு முன்பு மக்களை காக்கும் நிர்வாகமே மக்களின் நம்பிக்கையை பெறும் நிர்வாகம். இதையெல்லாம் அரசுக்கு அறிவுரையாக சொல்லவில்லை.

    கடந்த காலங்களிலே அம்மாவின் அரசு ,எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு களத்திலே பெற்ற அனுபவங்கள், கஜா புயலின் போது  ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் மேற்கொண்ட நடவடிக்கைகள் போன்றவற்றை வைத்தே கூறுகிறேன். இது சொந்த புராணம் பாடுவதாக அரசு இந்த கருத்தை தள்ளி வைத்து விடக்கூடாது. இது சொந்த புராணமோ, சுயபுராணமோ, நிச்சயமாக இல்லை. மக்களின் மீது அக்கறையோடு தான் கடந்த கால அனுபவங்களை புதிதாக பொறுப்பேற்றிருக்கிற அரசு, மக்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்க வேண்டும் என்கிற அக்கறையோடு தான் இந்த தகவலை சொல்லுகிறோம். 

    தவெக அரசு உச்ச நீதிமன்றத்தின்  நீதியரசர் கருத்தையே திரித்து, அதற்கு தலை வைத்து, கால் வைத்து, வால் வைத்து, கை வைத்து, நீங்கள் அந்த சமூக வலைதள பதவிகளை வெளியிட்ட அந்த குட்டு இப்போது உடைந்திருக்கிறது. 

    ஆகவே, அதுபோன்ற ஒரு செயற்கையான போலியான இல்லாத விளம்பரங்களை தேடுவதை தள்ளி வைத்துவிட்டு, இதுபோன்ற பேரிடர் காலங்களிலே ரீல்ஸை ஒத்தி வைத்துவிட்டு, ரியலிலே களம் இறங்க முன்வர வேண்டும், இந்த தவெக அரசு என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. 

    ரீல்ஸ் போடுங்கள், இன்ஸ்டாவிலே போடுங்கள், புகழை தேடுங்கள், யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. ஆனால் இதுபோன்ற பேரிடர் காலங்களிலே ரீல்ஸை முதலீடாக வைத்து, நீங்கள் ரியலை பின்னுக்கு தள்ளிவிட்டால், மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 

    மிகப்பெரிய பேரிடராக வருகிறபோது, அதிலே நாம் களத்திலே நின்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய முதன்மையான கடமை அரசுக்கு இருக்கிறது. ஆகவே, ரீல்ஸால் ஆட்சிக்கு வந்தோம், ஆகவே இந்த பேரிடரை ரீல்ஸை முன்னிறுத்துவோம் என்று இல்லாமல், ரீல்ஸை தள்ளி வைத்துவிட்டு, ரியலாக களத்திலே தவெக அரசு மக்களை பாதுகாக்க வேண்டும் என்கிற மக்கள் மீது இருக்கிற அக்கறையோடு சொல்லுகிறோம். நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.

    இதையும் படிங்க: சிரிச்சது குத்தமா?... தீயாய் பரவிய வீடியோவால் கொந்தளித்த மேயர் பிரியா... சி.எம்.விஜய்க்கு சரமாரி கேள்வி...!

    மேலும் படிங்க
    சிஜேபி-க்கு பாஜக இலவச விளம்பரம் தருகிறதா?: டெல்லி போலீஸ் விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்!

    சிஜேபி-க்கு பாஜக இலவச விளம்பரம் தருகிறதா?: டெல்லி போலீஸ் விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்!

    அரசியல்
    செஞ்சி சிறுமி மாயம்: 10 நாட்களாகியும் துப்பு துலங்காததால் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி டிஜிபி உத்தரவு!

    செஞ்சி சிறுமி மாயம்: 10 நாட்களாகியும் துப்பு துலங்காததால் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி டிஜிபி உத்தரவு!

    தமிழ்நாடு
    டெல்லியில் எகிறிய காற்று மாசுபாடு: GRAP-1 முதல்நிலை நடவடிக்கைகள் அதிரடி அமல்!

    டெல்லியில் எகிறிய காற்று மாசுபாடு: GRAP-1 முதல்நிலை நடவடிக்கைகள் அதிரடி அமல்!

    தமிழ்நாடு
    சனநாயகம் சாகவில்லை! கார்த்திகா கைதை எதிர்த்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சீமான் நன்றி!

    சனநாயகம் சாகவில்லை! கார்த்திகா கைதை எதிர்த்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சீமான் நன்றி!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கு இடமில்லையா? கொடி நாள் பேட்ஜ் சர்ச்சையில் தவெக அரசை சாடிய திமுக!

    தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கு இடமில்லையா? கொடி நாள் பேட்ஜ் சர்ச்சையில் தவெக அரசை சாடிய திமுக!

    தமிழ்நாடு
    இனி காலை 6 மணிக்கே மெட்ரோ! பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் நேரம் மாற்றம்!

    இனி காலை 6 மணிக்கே மெட்ரோ! பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் நேரம் மாற்றம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிஜேபி-க்கு பாஜக இலவச விளம்பரம் தருகிறதா?: டெல்லி போலீஸ் விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்!

    சிஜேபி-க்கு பாஜக இலவச விளம்பரம் தருகிறதா?: டெல்லி போலீஸ் விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்!

    அரசியல்
    செஞ்சி சிறுமி மாயம்: 10 நாட்களாகியும் துப்பு துலங்காததால் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி டிஜிபி உத்தரவு!

    செஞ்சி சிறுமி மாயம்: 10 நாட்களாகியும் துப்பு துலங்காததால் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி டிஜிபி உத்தரவு!

    தமிழ்நாடு
    டெல்லியில் எகிறிய காற்று மாசுபாடு: GRAP-1 முதல்நிலை நடவடிக்கைகள் அதிரடி அமல்!

    டெல்லியில் எகிறிய காற்று மாசுபாடு: GRAP-1 முதல்நிலை நடவடிக்கைகள் அதிரடி அமல்!

    தமிழ்நாடு
    சனநாயகம் சாகவில்லை! கார்த்திகா கைதை எதிர்த்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சீமான் நன்றி!

    சனநாயகம் சாகவில்லை! கார்த்திகா கைதை எதிர்த்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சீமான் நன்றி!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கு இடமில்லையா? கொடி நாள் பேட்ஜ் சர்ச்சையில் தவெக அரசை சாடிய திமுக!

    தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கு இடமில்லையா? கொடி நாள் பேட்ஜ் சர்ச்சையில் தவெக அரசை சாடிய திமுக!

    தமிழ்நாடு
    இனி காலை 6 மணிக்கே மெட்ரோ! பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் நேரம் மாற்றம்!

    இனி காலை 6 மணிக்கே மெட்ரோ! பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் நேரம் மாற்றம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share