உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் அருகே கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று விட்டு திருமாவளவன், தன் காரில் திரும்பி செல்லும்போது, முன் பகுதியில் ராஜீவ் காந்தி என்கிற வழக்கறிஞர் சென்றுள்ளார்.
திருமாவளவன் சென்ற கார் ராஜீவ் காந்தியின் இருசக்கர வாகனத்தில் உரசி உள்ளது. இது தொடர்பாக ராஜீவ் காந்தி கார் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் வழக்கறிஞர் மீது விடுதலை சிறுத்தைகள் பற்றி நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீதும் மாறி மாறி குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு நீதி கேட்டு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் ஊர்வலமாகச் சென்று, வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்கள், பார்கவுன்சிலுக்குள் சென்ற வழக்கறிஞரை விரட்டி விரட்டி விசிகவினர் தாக்கியுள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சரிதான்... திருமாவுக்கு உடனடியா பாதுகாப்பு கொடுங்க... M.P. கமல்ஹாசன் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்...!
சென்னையில் வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய விசிகவினருக்கு எதிராக வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்தனர். தாக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜீவ் காந்தி கொடுத்த புகாரில் தற்போது வரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். காரை வைத்து வழக்கறிஞர் ஸ்கூட்டர் மீது மோதியது மட்டும் அல்லாமல் தாக்கவும் செய்துள்ளதாகவும் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை தாக்கியதோடு பார் கவுன்சிலுக்குள்ளும் விசிகவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய கரூர் கோரச் சம்பவம்… நிவாரணத் தொகை வழங்கிய திருமா…!