தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னையை நோக்கி அணிவகுக்கும் வாகனங்களால் சுங்கச்சாவடிகளில் கூடுதல் கவுண்டர்கள் அமைத்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
உளுந்தூர்பேட்டை:
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறைக்கு சென்ற தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னைக்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் திரும்புவதால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல், கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது
இதையும் படிங்க: கடும் போக்குவரத்து நெரிசல்... ஸ்தம்பித்தது ஜி.எஸ்.டி சாலை... திணறும் மக்கள்...!
தீபாவளி பண்டிகை நேற்று 20 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊரில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றனர்.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள், அனைத்து அரசு அலுவலகங்கள் இயங்கப்பட உள்ள நிலையில் விடுமுறைக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு செல்கின்றனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வழியாக நூற்றுக்கணக்கான கார் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து செல்கிறது. இதனால் டோல்கேட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் குறைக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் வாகன நெரிசல்கள் இன்றி செல்வதற்கு வசதியாக கூடுதலாக கவுன்டர்கள் திறக்கப்பட்டு கார் உள்ளிட்ட வாகனங்களை அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை டோல்கேட் வழியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி சென்ற நிலையில் தற்போது அந்த வாகனங்கள் அனைத்தும் மீண்டும் சென்னை நோக்கி திரும்பிய வண்ணம் உள்ளது. இதனால் டோல்கேட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சில நேரங்களில் இலவசமாகவும் வாகனங்களை அனுப்பி வைத்து வருகின்றனர். தொடர்ந்து உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி:
தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அதிகமானோர் கார்களில் பயணிப்பதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 8 வழிகள் திறகப்பட்டு வாகனங்கள் சென்னை நோக்கி பயணிக்கின்றன. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நின்று செல்கின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க கனரக வாகனங்கள் விழுப்புரத்தில் இருந்து செஞ்சி வழியாக மாற்றி அனுப்ப படுகின்றன.
தீபாவளி பண்டிகை முடித்துவிட்டு தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் வாகனங்களால் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
தீபாவளி பண்டிகை முடித்துவிட்டுதென் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கிஅதிகமாக வாகனங்கள் செல்கின்றது.நாளை பள்ளி மற்றும் கல்லூரி வேலை நாட்கள் என்பதால் இன்று இரவே சென்னை நோக்கி செல்ல வேண்டும் என பொதுமக்களின் வாகனங்கள் படையெடுத்து செல்வதால் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூட்ட மாத்து... 2 நாளுக்கு இத செய்யவே கூடாது! கனரக வாகனங்களுக்கு பறந்த உத்தரவு...!