தமிழகத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து வருகிறது. தலைமை செயலக சட்டமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், 2026-27ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். 20-ம் தேதி 2026-27-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2025-26-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளன.
பிப்ரவரி 20ம் தேதி வரை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இன்று வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதனை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் வழக்கமான நிதி ஒதுக்கீடுகள் மட்டுமின்றி, மக்களைக் கவரும் பல முக்கிய அறிவிப்புகளும் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது இடைக்கால பட்ஜெட்டில், இலங்கை தமிழர்களுக்கு 630 கோடி ரூபாயில் 10 ஆயிரத்து 469 புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளார். தற்போது தமிழ்நாட்டில் 6 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டதாகவும், எஞ்சிய 4 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இன்று தாக்கலாகிறது இடைக்கால பட்ஜெட்... கலைஞர், அண்ணா நினைவிடங்களில் அமைச்சர்கள் மரியாதை...!
தமிழர் பெருமையை பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகங்களை அமைத்துள்ளதாக தெரிவித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, 285 கோடி ரூபாய் செலவில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்றும் இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபை மொழிகளில் மொழி பெயர்க்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: AI டூ கீழடி… பேரவையில் திமுகவின் சாதனைகளை list போட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு..!