தமிழகத்தில் விசிக, புரட்சி பாரதம், இந்திய குடியரசுக் கட்சி, புதிய தமிழகம், ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட பல கட்சிகள் பட்டிலினத்தோர் உரிமைகளுக்காக போராடி வருகின்றன. இவற்றுள் விடுதலை சிறுத்தைகள் பற்றி பட்டியலின மக்களிடையே பெரும் செல்வாக்கை பெற்று விளங்கி வருகிறது. சட்டமன்றத்தில் நான் உறுப்பினர்கள் மக்களவையில் இரண்டு உறுப்பினர்கள் என மாநில அந்தஸ்து பெற்ற கட்சியாகவும் விசிக இருக்கிறது.
ஆனால் திமுகவோடு இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மக்களின் உரிமைகளுக்கு எதிராக நிற்பதாக சக பட்டியலின அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. அந்த வகையில் புரட்சி தமிழகம் கட்சியின் தலைவராக உள்ள ஏர்போர்ட் மூர்த்தி சமீப காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திருமாவளவனை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆபாசமாக திருமாவளவனை விமர்சித்ததாக கூறி ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் டிஜிபி அலுவலகம் முன்பாக விசிக தொண்டர்களால் ஏர்போர்ட் மூர்த்தி தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விசிக தலைவர் திருமாவளவன் குறித்த ஆபாசமாக விமர்சித்ததால் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: செங்கோட்டையன் இன்னும் முழுசா மனம் திறக்கல… திருமா ஓபன் டாக்!
திருமா பற்றி அவதூறாக பேசுவாயா? எனக் கூறி நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரான புரட்சித் தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தியதுடன் செருப்புகளை கழற்றி அவர் மீது வீசியும் உள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்திய நபர்கள் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கே களங்கம்... பொறுத்து பார்த்து பொங்கி எழுந்த திருமா... சாட்டையை சுழற்றுவாரா ஸ்டாலின்?