அரசியலின் இன்றைய ஹாட் நியூஸ் என்றால் செங்கோட்டையன் மனம் திறந்து பேசுவதாக அறிவித்ததுதான். அதிமுக தலைமை மீது அதீத அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் தான் மனம் திறந்து பேச இருப்பதாக அறிவித்தார். அவர் கட்சியை விட்டு விலகுவாரோ அல்லது கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் இணைக்க சொல்வாரோ என பல கேள்விகள் எழுந்தன. அதற்கு பதிலாக இன்றைய செய்தியாளர் சந்திப்பு அமைந்தது.
அதிமுகவிலிருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தினார். ஏற்கனவே கட்சியை பலப்படுத்தும் விதமாக அவர்களை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதனை புறக்கணித்து விட்டதாக குற்றம் சாட்டினார். ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்ததாகவும், எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராகியதாகவும் தெரிவித்திருந்தார். மறப்போம், மன்னிப்போம் என்பதைப் போல கட்சியிலிருந்து விலகியவர்களை அல்லது விலக்கப்பட்டவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் திமுகவை அகற்றி நல்லாட்சி கொடுக்க முடியும் என்றும் தெரிவித்து இருந்தார். செங்கோட்டையன் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது என்று சசிகலா, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் செங்கோட்டையனின் பேச்சு வெற்றி பேச்சு என்றும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் செங்கோட்டையனின் பேச்சு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, செங்கோட்டையனின் அறிவிப்பு அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்றும், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கே களங்கம்... பொறுத்து பார்த்து பொங்கி எழுந்த திருமா... சாட்டையை சுழற்றுவாரா ஸ்டாலின்?
இன்று மனம் திறந்து பேச போவதாக சொன்ன செங்கோட்டையன் முழுமையாக இன்னும் மனம் திறந்து பேசவில்லை என்பது அவரது பேட்டியின் மூலம் தெரிய வருவதாக கூறினார். இன்னும் கூட அவர் வெளிப்படையாக சொல்லலாம் என்றும் இருந்தாலும் அவர்களின் உட்கட்சி விவகாரம் என்றும் தெரிவித்தார். பெரியார் இயக்கம் என்னும் முறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுகவை பெரிதும் மதிப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இனிமே நல்ல FUTURE இருக்கு! NDA கூட்டணியில் இருந்து விலகிய TTV... வாழ்த்துச் சொன்ன திருமா..!