விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை திமுகவின் அடியாள் என ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வாக நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார்.
அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்திற்கு மாறி பல நாட்களாகிவிட்டது என்றும் விசிகவில் சில தலைவர்கள் மட்டுமே இருக்கிறார்கள் எனவும் கூறினார். திருமாவை திமுக அடியாளாக பயன்படுத்துகிறது என்றும் திருமா அடிப்படையில் நல்லவர் என்றும் ஆனால் சேர்க்கை தான் தவறு எனவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

மேலும், செந்தில் பாலாஜி பேசினால் அரசியலைப் பற்றி பேசினால் விலகுகிறேன் எனவும் பெரியாரைப் பற்றிய அவர் பேசட்டும்., இங்கேயே தூக்கு மாட்டிக் கொள்கிறேன் என்றும் தடாலடியாக தெரிவித்தார். கொள்கை ரீதியாக பாஜக எதிர்க்கும் இடத்தில் நாங்கள் எதிர்ப்போம் என்றும் முதல் குரல் நாங்களாக தான் இருப்போம் எனவும் கூறினார். ஒட்டு மொத்தமாக ஊழல் மட்டுமே செய்து கொண்டிருப்பதாகவும் திமுகவை சாடினார்.
இதையும் படிங்க: இதுவா டா தமிழ்நாடு... திருமாவை அடியாளாக பயன்படுத்தும் திமுக..! விளாசிய ஆதவ் அர்ஜுனா..!
இதனிடையே திருமாவளவனை திமுகவின் அடியாள் என கூறியது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே திருத்தணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆதவ் அர்ஜுனாவின் உருவ பொம்மையை எரித்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். திருமாவளவன் குறித்து அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: ஓடி ஒளிந்த அறிவாளிகள்... அதையெல்லாம் கண்டுக்காதீங்க... ஆதவ் அர்ஜுனாவுக்கு மா. சு. பதிலடி...!