சென்னை பன்னாட்டு விமான நிலையம், மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது, இது நகர மையத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதற்கு அருகில் கிளாம்பாக்கத்தில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் உள்ளது, இது தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் முக்கிய மையமாக உள்ளது. இந்த இரு மையங்களையும் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுவது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இந்த மெட்ரோ வழித்தடம் சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தது.மேலும் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த மெட்ரோ பாதையானது மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை சுமார் 15 கிலோமீட்டர் தொலைவு கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பாதையில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் போன்ற முக்கிய இடங்களில் மெட்ரோ நிலையங்கள் அமைய உள்ளன. இந்த நிலையங்கள் மூலம் விமான நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்கள் தடையின்றி இணைக்கப்படும்.
இதையும் படிங்க: வரும் 15ஆம் தேதி முதல் மெட்ரோ பணிக்கான லாரிகள் ஸ்ட்ரைக்... மணல் உரிமையாளர்கள் சங்கம் அதிருப்தி
நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், சி சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையும் வரையிலான முதற்கட்ட மெட்ரோ ரயில் பணிக்கு 1,964 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
இதையும் படிங்க: எல்லாமே OK... பூந்தமல்லி - போரூர் மெட்ரோ பாதுகாப்பு சான்று பெறும் சோதனைகள் நிறைவு!