சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்த கைதி ஆகாஷ் (26) உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார் மானாமதுரை டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர்கள் திலீபன் (திருப்புவனம்) குமாரவேல் பாண்டியன் (மானாமதுரை) எஸ்ஐ குகன் ஏட்டு தெய்வேந்திரன், போலீசார் இருளப்பன், காளீஸ்வரன், மகேந்திரன், முத்துப்பாண்டி மற்றும் மாவட்ட எஸ்பியின் தனிப்பிரிவு எஸ்ஐ முத்துராஜா, ஏட்டு முனீஸ்குமார் ஆகிய 11 பேரை மதுரை சிபிசிஐடி அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராக கூறி சம்மன் அனுப்பி உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் டெல்சன் ( 26). அந்தப் பகுதியில் இரண்டு பேரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் பாலத்தில் இருந்து குதித்த போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி மதுரை அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவர் திடீரென முச்சுதிணறல் எற்பட்டு உயிர் இழந்தார். இறப்பதற்கு முன்பாக ஆகாஷ் மானாமதுரை நீதிபதியிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தன் காலை போலீசார் இரும்பு கம்பியால் அடித்து ஒடித்ததாக கூறியிருந்தார் இந்த தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆகாஷ் மரணம் அடைய காரணமான போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக ஏராளமானவர்கள் ராமேஸ்வரம் மானாமதுரை நான்கு வழி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகாஷின் பிரேத பரிசோதனையில் அவர் உடலில் 28 இடங்களில் காயங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாக்கியது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்திரவிடப்பட்டது
இதையும் படிங்க: காலையிலேயே பரபரப்பு... ஆகாஷ் மரண வழக்கு... இன்று முதல் களத்தில் இறங்கியது சிபிசிஐடி...!
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் இன்ஸ்பெக்டர் திலீபன் ,சப்-இன்ஸ்பெக்டர் குகன் போலீசார் தெய்வேந்திரன், காளீஸ்வரன், சரத்குமார் ,மற்றும் மனோகரன் ஆகிய ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இன்ஸ்பெக்டர் திலீபனை ராமநாதபுரம் சரக்கடி டிஐஜி மணிவண்ணனும் மற்றவர்களை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத்தும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING போலீஸ் தாக்கியதால் விசாரணை கைதி மரணமா?... விடிந்ததுமே புதிய திருப்பம்...டிஜிபி அதிரடி உத்தரவு...!