திமுகவில் உள்ள பல்வேறு அதிகார மையங்களால் கட்சியின் நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். திமுகவில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என பல அதிகார மையங்கள் உள்ளதாகவும் பேசி இருக்கிறார். திமுக ஆட்சி மீது தமிழக மக்கள் வெறுப்பில் உள்ளதாகவும் ஆங்கில நாளிதிற்கு அளித்து பேட்டியில் கூறியுள்ளார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக, ஆட்சியில் பங்கு வகிக்கும் என்று அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்த நிலையில் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி ஒரு பக்கம் பேசி வருகிறார். இருப்பினும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என இபிஎஸ் கூறினாலும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா மீண்டும் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார். அதிமுக-பாஜக கூட்டணியில் கூட்டணி ஆட்சி குறித்து இரு தரப்பிலும் வெவ்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதிமுக தலைமையில் தான் ஆட்சி என இபிஎஸ் கூறி வரும் நிலையில், மீண்டும் மீண்டும் கூட்டணி ஆட்சி தான் என அமித் ஷா ஏன் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என செல்வதன் மூலம் அதிமுக தலைமையை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குகிறாரா அமித்ஷா எனவும் அதிமுக தலைமையில் தனித்து ஆட்சி என இபிஎஸ் கூறி வர கூடிய நிலையில், அமித்ஷாவின் நிலைப்பாடு கூட்டணியில் குழப்பத்திற்கு வழி வகுக்குமா என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. கூட்டணி ஆட்சி விவகாரத்தில் அதிமுக தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி என எடப்பாடி பழனிச்சாமி பேசுவதை நம்பினாலும், அமித்ஷா தனது நிலைப்பாட்டில் இருந்து ஒரு இன்ச் கூட நகராமல் கூட்டணி ஆட்சிதான் என அடித்து பேசுவது சற்று சந்தேகத்தை தான் எழுப்புவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. எதுவாயினும், தெளிவாக விளக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: எடப்பாடிக்கு சாதகமான சுற்றுப்பயணம்.. உற்றுப்பார்த்த டெல்லி.. அமித்ஷாவே வராராமே?
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பாஜக.. அந்த எண்ணம் எடுபடாது.. அன்வர் ராஜா பரபரப்பு பேச்சு..!