தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக அமையவிருக்கிறது. இந்தத் தேர்தலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே மீண்டும் உருவாகியுள்ள கூட்டணி முக்கிய பேசு பொருளாக உள்ளது. இந்தக் கூட்டணி, 2023 செப்டம்பரில் முறிந்த உறவை மீண்டும் புதுப்பித்து, தமிழ்நாட்டில் ஆளும் திமுகவை எதிர்கொள்ளும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

அதிமுகவும் பாஜகவும் கடந்த காலங்களில் பல தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளன. 1998 மற்றும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன. ஆனால், 2023 செப்டம்பரில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அதிமுகவின் மறைந்த தலைவர்களான ஜெயலலிதா மற்றும் அண்ணாதுரை ஆகியோரை விமர்சித்ததாகக் கூறி, அதிமுக இந்தக் கூட்டணியை முறித்துக் கொண்டது. இதனால், 2024 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டு, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியிடம் படுதோல்வியைச் சந்தித்தன.
இதையும் படிங்க: மூத்த குடிமக்களுக்கு இனி கவலையே வேணாம்... திமுக ஆட்சியில வந்த வரப்பிரசாதம்! அமைச்சர் சொன்ன ஸ்பெஷல் திட்டம்..!

இந்த நிலையில், மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டு கட்சிகளும் ஒட்டி உறவாடி வருகின்றன. அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான அன்வர் ராஜா, தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது என்று கூறிய கருத்து, அதிமுக-பாஜக கூட்டணிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதை போல், அதிமுக கூட்டணி அமைத்ததும் இயல்பானதுதான் என்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால், சிறுபான்மை சமூக வாக்குகள் பெரும்பாலும் கிடைக்காது தான் எனவும் தெரிவித்தார்.

சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது., ஆனால் சிறுபான்மை சமூகத்தில் உள்ள அதிமுகவினரின் வாக்குகள் நிச்சயமாக கிடைக்கும் எனக் கூறினார். அதேபோல் கூட்டணி ஆட்சியை தமிழ்நாடு மக்கள் என்றைக்கும் விரும்பியது இல்லை., அதனால், அதிமுக பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளார். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என கூறிய அவர், அதுமட்டுமல்லாமல் முதல்வர் தேர்வில் பாஜகவின் திட்டம் பலிக்க்காது என்றும் கூறினார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவும் பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், அன்வர் ராஜாவின் இந்தக் கருத்து கூட்டணிக்கு சவாலாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: #SORRY..ஐயா அவருக்கு அந்த நாகரிகம்-லாம் தெரியாதுங்க! சந்தடி சாக்கில் இ.பி.எஸ்-ஐ கலாய்த்த ரகுபதி