இன்று தவெக பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெறுகிறது. காலை 10:30 மணிக்கு விஜய் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார் என கூறப்பட்ட நிலையில் 10.20 மணிக்கு விஜய் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்தடைந்தார். இன்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான தவெக தொண்டர்கள் பொதுக்கூட்டம் நடக்கும் நுழைவாயில் முன்பு குவிந்த நிலையில், 8 மணிக்கு மேலாக பாஸ் இருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
விஜய் எப்போது பேசுவார் என தொண்டர்கள் காத்திருக்கின்றனர். புதுவை உப்பளம் மைதானத்தில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தில் விஜய்க்கு முன்னதாக ஆனந்த் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். இங்கு கூடிய கூட்டம் தலைவர் விஜய்க்காக வந்த கூட்டம் என தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்துடன் உரையாற்றினார்.

வேலை நாட்களில் இவ்வளவு பேர் கூடியுள்ளார்கள் என்றால் அது விஜய்க்காக மட்டும் தான் என்றும் கூறினார். புதுச்சேரியிலும் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி கண்டிப்பாக அமையும் என ஆனந்த் நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக 2026 ஆம் ஆண்டு விஜய் வருவார் என நம்பிக்கையுடன் பேசினார்.
இதையும் படிங்க: உங்களால நிறைய பேர் செத்து இருக்காங்க... தவெக ஆனந்தை எச்சரித்த பெண் போலீஸ் அதிகாரி...!
எதிர்பார்க்கும் இல்லாமல் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் குடும்பம் தளபதி குடும்பம் என்று தெரிவித்தார். தலைவர் வருகிறார் என்று சொன்னாலே ஒரு உண்மையான முகம் எதுவென்று சொன்னால் தமிழக வெற்றி கழகம் தான் என்று தெரிவித்தார். இன்னும் நான்கு மாதங்கள் உழைத்தால் புதுச்சேரியிலும் நமது ஆட்சி கண்டிப்பாக இருக்கும் என உறுதிப்பட தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரூர் பெருந்துயரம்... தவெக மாநில நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை..! சிபிஐ அதிரடி...!