தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் வன்னியர் சமூகத்தின் சார்பாளராகத் திகழும் பாட்டாளி மக்கள் கட்சி கடந்த சில மாதங்களாக உள் பிளவுகளால் சூழ்ந்து நிற்கிறது. இந்தப் பிரச்சனை, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளால் தீவிரமடைந்துள்ளது. இந்த உள் மோதல், தமிழ்நாடு சட்டமன்றத்தின் அரங்கில் தீவிரமான எதிரொலியைக் கொடுத்துள்ளது.
பா.ம.க-வின் 5 சட்டமன்ற உறுப்பினர்களில், சேலம் மேற்கு எம்.எல்.ஏ. அருள்., ராமதாஸ் ஆதரவாளராக இருந்தார். அன்புமணி, அவரை கட்சியிலிருந்து நீக்கியதாக அறிவித்து, சட்டமன்றக் குழு தலைவராக ஜி.கே. மணியை ஏற்கனவே நியமித்திருந்தாலும், புதிய மாற்றத்தை அறிவித்தார். செப்டம்பர் 24இல் நடந்த பா.ம.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில், எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ஐயனார் கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வை குழு தலைவராக ஒருமித்து தேர்ந்தெடுத்தனர். இந்த முடிவை சபாநாயகர் எம். அப்பாவுக்கு அன்புமணி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்தார். ஆனால், இந்த மாற்றத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. ஜி.கே. மணியின் நியமனத்தைத் தொடர்ந்து அங்கீகரித்த சபாநாயகர், புதிய கோரிக்கையை நிராகரித்தார்.

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உட்கட்சி பூசல்கள் சந்தித்து வரும் நிலையில், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவை கல்குவாரி காட்பாதர் என கடுமையாக விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், பாமகவின் உள் மோதல்களை மட்டுமல்லாமல், சட்டமன்றத்தின் செயல்பாடுகளையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதையும் படிங்க: பார்த்தாலே மனசு வலிக்குது... ஒரு மழைக்கே இந்த கதி..! சௌமியா அன்புமணி வேதனை...!
பாமக உட்கட்சி பிரச்சனையில் கறாராக நடந்து கொண்டதால் அன்புமணி விமர்சித்திருக்கலாம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். கல்குவாரிகளின் காட்பாதர் என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்த விவகாரத்திற்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி கொடுத்துள்ளார். தனது குடும்பத்தின் பெயரிலோ தனது பெயரிலோ குவாரிகள் எதுவும் இல்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: நான் எதிர்பார்க்கவே இல்ல.. ஐயா கொடுத்துட்டாரு…! செயல் தலைவர் பதவி வழங்கியது குறித்து ஸ்ரீகாந்தி கருத்து…!