கடலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஆண்டுக்கு ஒரு முறை டெல்டா பகுதிகளுக்கு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் ஆண்டுக்கு ஒரு முறை டெல்டாவுக்கு சென்று விட்டு நானும் டெல்டாக்காரன் என்கிறார் எனவும் விமர்சனம் செய்தார். திமுகவை விவசாயிகள் மன்னிக்கப்போவது கிடையாது என்றும் திமுகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய விவசாயிகள் முடிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
நெல்லுக்கு மாநில அரசு ஊக்கத்தொகை வழங்குவது யாராலும் தடுக்க முடியாது என்றும் மற்ற பயிர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊக்கத்தொகையை நிறுத்த சொன்னது போல் முதலமைச்சர் பேசுவதாகவும் அன்புமணி தெரிவித்தார்.

திமுகவுக்கு உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் ஏன் உரிய தொகை கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். ஒரு குவின்டால் நெல்லுக்கு ஊக்கத்தொகையாக ஒடிசா அரசு 800 ரூபாய் கொடுப்பதாகவும், தெலுங்கானா அரசு 500 ரூபாய் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு குவிண்டால் நெல்லுக்கு மத்திய அரசு 2,369 ரூபாய் கொடுக்கிறது என்றும் மாநில அரசு வெறும் 131 ரூபாய் தான் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கூட்டணி கட்சி தலைவரை மதிக்கத் தெரியாத பிரேமலதா மக்களை எப்படி மதிப்பார்..? விளாசிய அன்புமணி..!!
நாடாளுமன்ற தேர்தல் முடிந்து இரண்டு ஆண்டுகளாகி விட்டதாகவும் ஆனால் நாடாளுமன்ற தேர்தல் எண்ணத்திலேயே முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது நடக்க இருப்பது சட்டமன்றத் தேர்தல் என்பதையும் தெரிவிக்க விரும்புவதாக கூறினார். அவதூறுகளை பரப்பி திமுக தனிநபர் விமர்சனத்தை முன் வைப்பதாகவும் குற்றம் சாட்டினார். திமுகவுக்கு எதிராக மக்கள் மிகுந்த கோபத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!