சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி. திருச்சி சிவா பேசினார். அப்போது, காமராஜர் குறித்து கலைஞர் கருணாநிதி கூறியதாக சிலவற்றை திருச்சி சிவா பகிர்ந்து கொண்டார். மின் பற்றாக்குறை குறித்து தமிழகம் முழுவதும் காமராஜர் கண்டனம் தெரிவித்து இருந்தார். இருந்தாலும் அவருக்கு குளிர்சாதன வசதி இல்லையென்றால், உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதற்காக அவர் தங்கும் விடுதி உட்பட அனைத்து அரசு பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி ஏற்படுத்த கருணாநிதி உத்தரவிட்டதாக கூறினார்.
அவசரநிலை காலத்தில் காமராஜரை கைது செய்ய மத்திய அரசு முயன்றபோது, திருப்பதி செல்வதற்காக காமராஜர் திட்டமிட்டிருந்தார். திருப்பதி சென்றால், காமராஜரை கைது நடவடிக்கையில் இருந்து தன்னால் காப்பாற்ற முடியாது என்று கூறியதாக கருணாநிதி கூறியதாக பேசினார். மேலும், காமராஜரின் உயிர்பிரிகையில், கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டு, நாட்டையும் ஜனநாயகத்தையும் கருணாநிதி காப்பாற்ற வேண்டும் காமராஜர் சொன்னதாக பேசி இருந்தார்.

திருச்சி சிவாவின் இந்த பேச்சு உண்மைக்கு புறம்பானதாக இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திருச்சி சிவாவும், திமுக அரசின் தமிழக மக்களிடம் நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். கர்மவீரர் காமராஜரை அவமதிக்கும் எந்த ஒரு மன்னிக்க முடியாது என்று தெரிவித்த அவர், திருச்சி சிவாவின் கருத்துக்கள் அநாகரிகமானது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: கம்பி கட்டுற கதையெக்கெல்லாம் சொல்லிகிட்டு.. திருச்சி சிவாவிற்கு சீமான் பதிலடி..!
காமராஜர் எந்த காலத்திலும் ஆடம்பரங்களை விரும்பியதில்லை எனவும் அவர் நினைத்திருந்தால் ஆடம்பரமாக வாழ்ந்திருக்கலாம்., ஆனால் அவர் எளிமையின் வடிவமாக வாழ்ந்து மறைந்தார் என்றும் குறிப்பிட்டார். மேலும் காமராஜர் இருக்கும்போதே அவரை தரைக்குறைவான வார்த்தைகளால் திமுக தலைமை விமர்சித்தது என்றும் கூறினார். எனவே திருச்சி சிவா மற்றும் திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கூற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்கள் வரலாற்றை மறைப்பதற்கு நீ யார்? திமுக எம்.பி திருச்சி சிவா காட்டம்!!