வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற வின் வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்களில் மூவருக்கும், சீருடை பணியாளர்கள் உட்பட அரசு ஊழியர்களில் மூவருக்கும் இப்பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை என கூறப்பட்டு உள்ளது. இவ்விருது ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும்.

இப்பதக்கம் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலினால் 2026 குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டது. 2026-ஆம் ஆண்டிற்கான வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருதுக்கு பரிந்துரைகள் கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கரூரில் என்ன நடந்தது? ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உரிமையாளரிடம் துருவித் துருவி விசாரணை..!
வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீரதீர செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் தெளிவாகவும், தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தது. விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15 டிசம்பர், 2025 என்றும் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ரூ. 20 லட்சம் வரை வைப்புத் தொகை... ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைக்கான பரிந்துரை வெளியீடு...!