சென்னையின் கிண்டி பகுதியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாட்டின் பொறியியல் கல்வியின் மையமாகத் திகழ்ந்து வருகிறது. இந்தப் புகழ்பெற்ற நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆர். வேல்ராஜ், தனது நீண்டகால சேவையின் முடிவில் ஓய்வு பெறும் நாளான ஜூலை 31, 2025 அன்று, திடீரென பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம், கல்வி வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், அவருக்கு எதிரான நிலையான புகார்களை அடிப்படையாகக் கொண்டு, பணியிடைநீக்க உத்தரவு நிறைவேற்றப்பட்டது. முக்கிய குற்றச்சாட்டு, 2023-24 காலகட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ஏற்பட்ட முறைகேடுகள். குறிப்பாக போலி பேராசிரியர்கள் பட்டியல் சமர்ப்பித்த கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இதை அடுத்து வேல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போலி பேராசிரியர் விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி பேராசிரியர் விவகாரத்தில் தொடர்புடைய 11 பேர் உயர் பொறுப்பில் உள்ள நிலையில் விசாரணை நேர்மையாக நடக்க அதிரடி நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: முடிவே இல்லையா? சிவகங்கையில் நிகழ்ந்த கொடுமை... மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்...!
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. துணைவேந்தராக இருந்த வேல்ராஜ் சஸ்பெண்ட் உத்தரவில் ஆளுநர் ரவி தலையிட முடியாது என்றும் சஸ்பெண்ட் உத்தரவை ஆளுநரால் ரத்து செய்ய முடியாது என்றும் சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடப்பாவமே... கொட்டாவி விட்டது குத்தமா? வாயை மூட முடியாமல் தவித்த இளைஞர்...!