திருச்சியில் இருந்து சென்னைக்கு ப்ராஜெக்ட் செய்ய வந்திருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அடையாறு C.L.R.I.க்கு ப்ராஜெக்ட் தொடர்பாக மாணவி ஒருவர் சென்றுள்ளார். தற்போது அந்த மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஈரம் காய்வதற்குள் நிகழ்ந்துள்ள அடுத்த பாலியல் வன்கொடுமை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சியிலிருந்து ப்ராஜெக்டுக்காக சென்னை வந்திருந்த மாணவிக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. காரில் கடத்திச் சென்று மூன்று பேர் தன்னை மிரட்டியதாக அபிராமிபுரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பின் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நிகழும் தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். விளாத்திகுளம் அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவமும், மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவமும் நடந்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை என்றும் இவை மக்களின் மனதில் ஆறாத காயமாக இருக்கும் நிலையில், தனது கல்வி தொடர்பான ப்ராஜக்ட் பணிக்காக சென்னை வந்த திருச்சியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி மீதும் பாலியல் வன்கொடுமை தாக்குதல் நடைபெற்றுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: தொடரும் போர் பதற்றம்... தமிழர்களுக்கு சிறப்பு விமான சேவை... பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!!
சென்னைக்கு வந்த திருச்சி கல்லூரி மாணவியை, ஒரு கும்பல் மிரட்டி, காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது என்றும் தமிழகத்தின் தலைநகரிலேயே, அதுவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்திலிருந்து வெறும் பத்து நிமிட தூரத்தில், இப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சியூட்டுகிறது எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் நம் சகோதரிகள் மீது நடைபெறும் ஒவ்வொரு பாலியல் வன்கொடுமையும், இந்த கையாலாகாத திமுக அரசின் கீழ், சட்டம், ஒழுங்கு எவ்வளவு செயலிழந்து போய் விட்டது என்பதை, வேதனையுடன் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது எனவும் அண்ணாமலை கூறினார்.
இதையும் படிங்க: எஸ்மா சட்டத்தை திணிக்கும் மோடி அரசு... அலட்சியமே காரணம்... திருமாவளவன் கண்டனம்..!!