நீலகிரி மாவட்டத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள யானை பாகன்களுக்கான மாவூத் கிராமத்தைத் திறந்து வைத்தார், முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் (Aerial Bunched Cable) சேவைகளைத் தொடங்கி வைத்தார் வன சரகர்களின் பயன்பாட்டிற்காக 32 வாகனங்களின் சேவைகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127வது மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “5 நாள் பயணம் மிகச் சிறப்பாக இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது.

அதே நேரத்தில் மக்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மக்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு எந்த அளவுக்கு ஆதரவு தராங்கங்கறது நீலகிரி மாவட்டத்தில் இருக்கிற மக்கள் மட்டும் இல்லை, இங்கே சுற்றுலாப் பயணிகளாக வரக்கூடிய மக்களும் எழுச்சியை ஆதரவை வெளிப்படுத்துனப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது என்றார்.
இதையும் படிங்க: அன்னைக்கு இனிச்சது.. இன்னைக்கு வலிக்குதா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!
தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள உச்சநீதிமன்றத்திற்கு விளக்கம் கேட்டு குடியரசு தலைவர் நோட்டீஸ் அளித்துள்ளது குறித்து கேட்டபோது அது குறித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் கருத்துக் கேட்டது தொடர்பாக மற்ற மாநிலத்தின் முதலமைச்சர்கள், தலைவர்களுடைய கருத்துக்களையும் கேட்டு அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என்றும் கூறினார்.

மத்திய அரசு இப்போது மட்டுமல்ல எப்போதுமே சர்வாதிகாரத்தை கடைப்பிடித்து வருவதாக கூறிய அவர் பா. சிதம்பரம் இந்திய கூட்டணி வலுவிழந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அது அவருடைய கருத்து என்று தெரிவித்தார். 2026 மட்டுமல்ல 2031மற்றும் அதற்கு அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்றார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானங்களில் மேம்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தலைவர் பதவி இல்லாத நிலையில், ஆடு, மாடு, விவசாயம் என்று நன்றாக இருக்கிறேன். இப்போதுதான் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் என்று கூறினார்.

இந்தியாவில் ஜனநாயகம் சிறப்பாக உள்ளதாகவும், உச்சநீதிமன்றம் ஜனாதிபதி ஆகியோர் அவரவர் வரம்புக்குள் தங்களது வேலைகளை பார்த்து வருகிறார்கள் என்றும், ஆகவே ஜனாதிபதி பெற்றுள்ள 14 கேள்விக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு பதில் அளிக்க உள்ளனர் என்றும் ஆகவே இது தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கை என்று முதலமைச்சர் எப்படி கூற முடியும் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

2036 வரை தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அண்ணாமலை, ஊட்டியில் கொஞ்சம் வெயில் குறைவு. வெயில் குறைவாக இருந்தால் எதையெதையோ பேச தூண்டும். சென்னை வெயிலுக்கு வந்தவுடன் முதலமைச்சருக்கு எல்லாம் தெளிந்து விடும். ஊட்டியில் உள்ளதால் தெளியாமல் உள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னை வெயிலுக்கு வந்தவுடன் 2026 இல் திமுக தோற்றுவிடும் என்று தெரிந்துவிடும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. இருவர் இழப்பீடு பெற விண்ணப்பம்.. மற்ற பெண்களுக்கும் துளிர் விடும் நம்பிக்கை..!