உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கண்காணிப்பில் CBI-விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர் சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம் என்ற விவரம் தெரியாதவரா தமிழ்நாட்டின் முதல்வர் என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார். இது பதவி பிரமாணத்திற்கு எதிரான குற்றம் என்று முதல்வருக்கு தெரியாதா என்றும் கேள்வி கேட்டுள்ளார்.
41 பேர் கொலைக்கு காரணம் காவல்துறைதான் என்ற அபாண்டத்தை அள்ளி வீசுவது முதல்வருக்கு அழகா என்றும் இதனை இருமுறை டெல்லி CBI விசாரணைக்கு சென்ற போது மேற்படி குற்றச்சாட்டை தெரிவித்தீர்களா எனவும் அப்பாவும் கேள்விகளை முன் வைத்தார்.

மேலும், தமிழக முதல்வர் அரசு தலைமை செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர்கள் வழிகாட்டுதலோடு ஆட்சி நடத்துகிறாரா? அல்லது சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வழிகாட்டுதலோடு ஆணவ வசனம் பேசி வருகிறாரா? என சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: CBI கேட்பீங்களா..? எதிர்க்கட்சிகளை மிரட்டுவீங்களா.? சொல்லுங்க CM..! விளாசிய அப்பாவு..!!
சட்டமன்றத்தில் Party FUND என்று சொன்னதும் தி.மு.க வினர் ஓடி விட்டார்கள் என்று வாய்மொழியாகவும், உடல் மொழியாகவும் நக்கலடிக்கும் CM sir தேர்தலுக்கு முன் உங்கள் சட்டமன்ற வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் ரூபாய் 2 கோடி முதல் ரூபாய் 10 கோடி வரை Party Fund-பெற்றுக்கொண்டுதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாக உங்கள் ரசிகர்களும், த.வெ.க கட்சியினரும் புலம்புவது உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா என்றும் இது Party FUND இல்லையா? இதுதான் தூய கட்சி ஆட்சியின் லட்சணமா எனவும் முன்னாள் சபாநாயகர் அப்பாவு முதல்வர் விஜய்க்கு பல்வேறு கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: "எல்லாமே FAKE"..! ஊத்தங்கரை MLA வின் புகார் பொய்...!! வரிந்து கட்டிய அப்பாவு..!