விஜய் கட்சி தொடங்கிய நேரத்தில் இருந்தே அருண் ராஜ் அவருக்கு ஆலோசனைகளை அளித்து வந்ததாக கூறப்பட்டது. பதவியை ராஜினாமா செய்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணையுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புஸ்ஸி ஆனந்துக்கு இணையான பதவி அருண்ராஜுக்கு வழங்கப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தில் அருண் ராஜ்க்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் பதவியை அருண்ராஜ் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை மத்திய நிதி அமைச்சகமும் ஏற்றுள்ளது. அருண் ராஜ் சென்னை திரும்பியவுடன் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: தோல்வி காணாத நாயகர்.. போருக்கு முன்பே வாகை சூடுபவர்.. முத்தரையருக்கு தவெக தலைவர் விஜய் புகழாரம்!

இதனுடைய அருள்ராஜின் தமிழக வெற்றிக் கழக பிரவேசம் புசியானத்திற்கு நெருக்கடியாக மாறும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு..! முள்ளிவாய்க்கால் நினைவு தின வீரவணக்கம் செலுத்திய விஜய்..!