இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு இறுதிகட்ட போர் நடைபெற்றது. அப்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த நாளை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரித்து வருகின்றனர்.

அந்த வகையில் மே 18ஆம் தேதியான இன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக வெற்றிக்கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று மாலை 6:00 மணிக்கு உயிரிழந்த ஈழ தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் செலுத்தும் நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாஜகவோட கூட்டணி இல்லைன்னு விஜய் சொன்னாரா? பொடி வைத்துப் பேசிய தமிழிசை!

இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை ஒட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீரவணக்கம் செலுத்தி உள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம் என கூறியுள்ளார்.

மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும் என கூறியுள்ள விஜய், மாமக்கள் போற்றுதும், மாவீரம் போற்றுதும் என தனது பதிவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினம்.. த.வெ.க அனுசரிப்பு.. மாவட்டச் செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு..!