சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் அமர்வு என்று தொடங்கி நடைபெற்ற வருகிறது. மேகதாது விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் விளக்கம் கொடுத்தார். மேகதாத தொடர்பான தனி தீர்மானத்தின் மீது அதிமுக மற்றும் இடதுசாரிகளுக்கு சந்தேகம் விழுந்த நிலையில் விளக்கம் கொடுக்கப்பட்டது. காவிரி நதிநீர் விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அமைச்சர் ஆனந்த் கூறினார்.
மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என பிரதமரை நேரில் சந்தித்து முதல்வர் விஜய் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். மாநிலத்தின் நதிநீர் உரிமையை காப்பதில் தமிழக வெற்றிக்கழக அரசு துளியும் சமரசம் செய்யாது என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். விவசாயிகளின் உரிமைகள் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக அரசு சமரசம் செய்யவே செய்யாது என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் ஆனந்த், மேகதாது அணை திட்டத்தை தடுக்கும் விவகாரத்தில் சிலர் தவறான தகவலை பரப்பி வருவதாகவும் கூறினார்.

மேகதாது அணை திட்டத்தை தடுக்கும் விவகாரத்தில் சிலர் தவறான தகவலை பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேகதாது அனைத்து எதிரான புதிய நடுவர் மன்றம் தேவையில்லை என சிலர் கூறுவதாகவும் தெரிவித்தார். புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் ஆனந்த் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: மேகதாது உரிமை மீறல் பிரச்சனை..! பேரவையில் இபிஎஸ் கடும் வாக்குவாதம்..!! அதிமுகவினர் வெளிநடப்பு..!!
மேகதாது விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் செய்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேகதாது விவகாரம் குறித்து தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு சட்டசபையில் விவாதிக்க அனுமதி கிடையாது என்று சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்தார். உதயநிதி பேசியபோதே கையெழுப்பி தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என்று அதிமுக உறுப்பினர்கள் கூறியிருக்கலாம் என்று தெரிவித்தார். தலைப்புச் செய்திகள் வர வேண்டும் என்பதற்காக தனிப்பட்ட விளம்பரத்திற்காக பேசுவது ஏற்க முடியாது என்று சபாநாயகர் பிரபாகர தெரிவித்தார்
இதையும் படிங்க: LIVE டெலிகாஸ்ட் ஆகுது..!! "கண்ணியமா நடந்துக்கோங்க"...! பேரவையின் 3 ஆம் நாள் அமர்வில் கடும் அமளி..!!