தமிழகத்தில் வேத பிராமணிய எதிர்ப்பு, தீண்டாமை, சாதி ஒழிப்பு, வகுப்புவாரி பிரதிநித்துவம், பெண்ணுரிமை, தமிழ்மொழி உணர்வு, சுயமரியாதை, பகுத்தறிவு போன்றவை குறித்து சிந்தித்தவர் அயோத்திதாச பண்டிதர்.

100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் என்ற வார இதழை நடத்திய பத்திரிகையாளர், எழுத்தாளர், சமூக சீர்திருத்த சிந்தனையாளர், சித்த மருத்துவர், தமிழறிஞர், பௌத்த பேரறிஞர் என பன்முக தன்மைகளை கொண்ட அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்தநாள் இன்று. அயோத்திதாச பண்டிதரின் 180 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 135வது பிறந்தநாள்..! முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை..!

சென்னை கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள அயோத்திதாச பண்டிதரின் மணிமண்டபத்தில் அவரது திருகுருவச் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி செழியன், சி. வி. கணேசன், மதிவேந்தன்,சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: முக்கிய ஆவணங்கள் திருட்டு... போலீஸ் விசாரணை வளையத்துக்குள் ராஜ்பவன் ஊழியர்கள்!